Saturday, 9 May 2015

யார் போதைக்கு அடிமை?


பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிபழக்கத்தைப் பற்றி விசாரித்தால் ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில் தான் முதலில் வரும். நாம் நமது நிலத்திற்கு எல்லைக்கோட்டை குறைத்தும் வரைந்து கொள்ளலாம் அல்லது பக்கத்து நிலத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அரசாங்க டாக்குமெண்ட்களில் என்ன இருக்கிறதோ அதுதான் சரியான எல்லையின் வரைமுறையாகும். அது போலத்தான் குடிப்பழக்கத்திற்கு ஒருவர் அடிமையா இல்லையா என்பதற்கும் சில வரைமுறைகள் இருக்கிறது. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தை பொறுத்தது அல்ல. கீழ்காண்பவைகளில் ஏதேனும்
சில இருந்தாலே அந்நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.

  •   தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களை விட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது
  •   ஆரம்பத்தில் குடித்ததை விட அதிகம் எடுத்தால் தான் போதை வருகிறது என்ற நிலை
  • பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல்
  • உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை
  • குடித்தால் தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை
இந்த கண்றாவியையா குடித்தோம் என்ற குற்றவுணர்ச்சியோடு சிலர் காலையில் எழுவது உண்டு. ஆனால் காலையில் பிள்ளையின் தலையில் சத்தியம் செய்த சென்ற பின்னரும் மாலையில் போதையோடுதான் வீடு திரும்புவார்கள். சிலர் பெட் காபி போல் காலையில் கண் விழிப்பதே மது பாட்டில் முன்புதான். இந்த இரண்டு நிலையுமே தீவிரமான அடிமைதனத்தின் அறிகுறியாகும். ஒருவர் தான் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை உணர்ந்து ஒத்துக்கொள்வது தான் மாற்றத்தின் முதல் படியாகும்.

No comments:

Post a Comment