- "இந்த வயதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட எண்ணங்கள் வருவது இயற்கைதான், நாங்களும் அதைக் கடந்துதான் வந்திருக்கிறோம்" என்று கூறி ‘தாங்கள் பெற்றோரால் புரிந்துகொள்ளப்படுகிறோம்’ என்ற உணர்வை விடலைப் பருவத்தினரிடம் ஏற்படுத்துங்கள்.
- செக்ஸைப் பற்றி பேசித் தேவையில்லாமல் நாமாகவே அந்த எண்ணத்தை விதைத்துவிடுவோமோ என்ற பயம் வேண்டாம். அது இயல்பானது. அந்த வயதுக்குரியது.
- வாரிசுகளின் சங்கோஜமான அல்லது முரண்பாடான கேள்விகளாலோ கருத்துகளாலோ கோபமோ பதற்றமோ அடையாதீர்கள். மாறாக "நீ இப்படி வெளிப்படையாகக் கேட்பது எனக்குப் பிடித்திருக்கிறது. பிரச்சினையைத் தீர்க்க இதுதான் முதல் படி" எனப் பாராட்டுங்கள்.
- பாலியல் குழப்பங்கள், பாலியல் சார்ந்த வன்முறைகளால் ஏற்படும் மன உளைச்சல்கள், இளம் வயது கர்ப்பம், பால்வினை
Labels
Wednesday, 18 November 2015
பாலியல் கல்வியில் பெற்றோரின் பங்கு (பதின் பருவம் புதிர் பருவமா?)
செக்ஸ் கல்வியின் தேவை (பதின் பருவம் புதிர் பருவமா?)
வயது ரீதியான சாதாரண உடல், மன மாற்றங்களைப் பற்றி அடிப்படைத் தெளிவுகூட இல்லாமல் விடலைப் பருவத்தினர் தொடர்ந்து உழன்றுகொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இன்மையும், வெளியில் சொல்ல வெட்கப்படுவதும்தான். சிறுநீரகத்தில் கல்லடைப்புக்கு எந்த மருத்துவரைப் பார்க்கலாம், என்ன செய்யலாம் என்று அது தொடர்பாகச் சிகிச்சை பெற்ற ஒருவரிடம் கேட்கலாம். ஆனால், பாலியல் சந்தேகங்களை யாரிடம் கேட்பது? பலருக்கும் இப்படிச் சந்தேகங்கள் நீண்டுகொண்டே போகும்.
கடைசியில் முறைசார்ந்த பயிற்சி பெற்ற மருத்துவருக்குப் பதிலாக, விளம்பரங்களால் கவரும் போலி மருத்துவர்களிடம் சரணடைந்து விடுவதுதான் பலரும் சென்றடையும் தவறான பாதையாக இருக்கிறது. வளர்இளம் பருவத்தினரிடம், பெற்றோர் நல்ல நண்பனைப்போல நடந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. நண்பர்கள் மற்றும் வலைதளங்கள்
கண்களை மறைக்கும் காதலும் காமமும் (பதின் பருவம் புதிர் பருவமா?)
‘நான் எனது குழந்தைகளை வெளியில் படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உறவு வைத்துக்கொள் என்றே சொல்லி அனுப்புவேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கூறினார். அந்த நேரத்தில் அவர் கூறியது எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. ஆனால், இப்போது செக்ஸ் சார்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அவர் கூறியதைவிட நெருடலாக இருக்கும் அளவுக்குப் போய்விட்டன.
மேற்கத்தியக் கலாச்சாரத்தால் உலகெங்கும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றங்களில் நம்மில் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒன்று: வளர் இளம்பருவத்தில் கர்ப்பமாதல்!
மேற்கத்திய நாடுகளில் இரு பாலினத்தவரும் 16 அல்லது 17 வயதில் முதன்முறையாகப் பாலியல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். அங்கு எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே தங்களுடைய முதல் உடலுறவு அனுபவத்தைப் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் அது போன்ற விரிவான புள்ளிவிவரங்கள்
சுய இன்பம் பாவமா-masturbation (பதின் பருவமா, புதிர் பருவமா?)
எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், இது பற்றிய சந்தேகமும் பயமும் இளம்பருவத்தினரை எப்போதும் தொற்றிக்கொண்டே இருக்கும் வேதாளம் போன்றது. சுயஇன்பம், சுயமைதுனம், கைப்பழக்கம் எனப் பல பெயர்களைக் கொண்ட இந்தப் பழக்கத்துக்கு, ஆங்கிலத்தில் மாஸ்ட்ருபேஷன் (Masturbation) என்று பெயர்.
இந்தப் பழக்கம் மூன்று வயது சிறுவர்களிடம்கூட, வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் காணப்படும் என்பது ஆச்சரியமான செய்தி. மூன்று வயதில்தான் ஒரு குழந்தைக்குத் தான் ஆணா, பெண்ணா என்ற வேறுபாடு புரிய ஆரம்பிக்கும். இன்பம் பெறுவது நோக்கமாக இல்லாவிட்டாலும் குழந்தைகள் அடிக்கடி தங்கள் பாலுறுப்பைத் தூண்டுவது இயற்கையான ஒன்று. இது காலப்போக்கில் மாறிவிடும்.
முதல் அறிமுகம்
இந்தப் பழக்கம் பெரும்பாலும் நண்பர்களின் மூலமாக அறிமுகமாகிறது. ஆய்வு முடிவுகளின்படி 13-14 வயதுக்குள் இரு பாலினத்தவருமே இதைப் பற்றிய தேடல் ஆரம்பித்து விடுவதுடன், முதல் அனுபவத்தையும் பெற்றுவிடுகிறார்கள்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்களும் சுயஇன்பம்
ஈர இரவுகள் (பதின் பருவமா, புதிர் பருவமா- 7)
வளர் இளம்பருவத்தில் நுழைந்த புதிதில், பலருக்குச் செக்ஸ் சார்ந்த கனவுகள் வருவது சகஜம்தான். சில நேரம் தெரிந்த நபர்கள்கூட அந்தக் கனவுக் காட்சிகளில் வரலாம்.
ஒருமுறை 15 வயது மாணவர் ஒருவர், தனக்குப் பாலியல் ரீதியான கனவுகள் அடிக்கடி வருவதாகவும், அது அவருடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் பாவம் என்று கருதுவதாகவும் கூறினார். 'தான் மோசமானவனாக மாறிவிட்டேன்' என்ற குற்றவுணர்ச்சியே இதுபோன்ற பதற்றங்களுக்குக் காரணம். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகள் பற்றிய ஆராய்ச்சியின்படி, அன்றாடம் நிகழும் பல சம்பவங்களால் ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே கனவு. இது ஒரு பாதிப்பு இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈர இரவுகள்
'சொப்பன ஸ்கலிதம்' இளம் பருவத்தினருக்குச் சிம்மசொப்பனம். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதையே மருத்துவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், இந்த ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியே தொலைக்காட்சி, பத்திரிக்கை விளம்பரங்கள் மூலமாகப் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களின் மனதைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் காசு பறித்து வருகின்றன பல கும்பல்கள்.
வளர் இளம்பருவத்தினர் எல்லோருக்கும் இந்த அனுபவம் சில முறையாவது
ஹார்மோன்களின் விளையாட்டு-(பதின் பருவம் புதிர் பருவமா- 6)
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோனும், பெண்களுக்கு ஈஸ்டிரோஜன், புரொஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்களும் செய்யும் வேலையால் உடலிலும் மனதிலும் பலவிதமான பாலியல் ரீதியான மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
பையன்களுக்கு மீசை மற்றும் உடலில் ரோம வளர்ச்சியும், பெண் குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, உடல் வடிவங்களில் மாற்றம் மற்றும் மாதவிடாய் ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில் நுழைவதற்கான லைசென்ஸ் என்றே கருதலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மட்டுமல்ல, உடல் மற்றும் பாலியல் வளர்ச்சியிலும் முதலிடம் பெண்களுக்குத்தான். ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வளர்ச்சி வேகமடைவதும் விடலைப்பருவம்தான்.
ஒப்பிடுதல்
ஆணுறுப்பு வளரும் இந்த நேரத்தில்தான் பையன்களுக்குப் பல சந்தேகங்கள் வரும். நண்பர்களுடன் அடிக்கடி இதைப் பற்றி பேசுவதால் ஆணுறுப்பின் வளர்ச்சியைக் குறித்த பயம்
பாலியல் பயணம் (பதின் பருவம் புதிர் பருவமா?)
‘செக்ஸ்’. இந்த வார்த்தையைக் கேட்டவுடன் காதை பொத்திக்கொண்டு ஓடுபவர்களும், ‘களுக்' என்று வாயை மூடிக்கொண்டு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பவர்களுமே அதிகம். இதன் காரணமாகவே வளரிளம் பருவத்தினர் 'செக்ஸ்' என்பது பாவமான காரியம் என்றோ அல்லது கேலிக்குரிய செயல் என்றோ குழப்பத்தில் தத்தளிக்கின்றனர்.
உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனிதர்களுக்கு, இன்னும் பல நேரங்களில் புரியாத புதிராய் இருப்பது செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். அதிலும் இந்தியர்களுக்குப் பாலியல் குறித்த சந்தேகங்களும், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்களும் அதிகம்.
இதைத்தான் மனநலப் பேராசிரியர் ஒருவர் நகைச்சுவையாக இப்படிச் சொன்னார்: "ஆங்கிலேயர்கள் செக்ஸை இனப்பெருக்க உறுப்புகளில் (Genitals) வைத்து முடித்துவிடுவார்கள், ஆனால் இந்தியர்கள் அதை எப்போதும் மனதிலேயே (Mind) வைத்திருப்பார்கள்".
உளவியல் அடிப்படை
‘செக்ஸ் உணர்வு என்பது மனிதர்கள் குழந்தைகளாக
நட்பு-வட்டமா?வலையா? (பதின் பருவம் புதிர் பருவமா? 5)
‘அவன் கூட டூ! உன்கூட பழம் விட்டுக்கட்டுமா?' என்று கேட்பது குழந்தைப் பருவ நட்பு. ‘மச்சி இன்னிக்கு ஒரு நாளாவது ‘கிளாஸை கட்' அடிக்கிறியா... சும்மா அடிச்சுப் பாரு மச்சி!' என்பது விடலைப் பருவ நட்பு.
நடத்தையை வைத்தே, மேற்கண்ட இரண்டு நட்புக்கும் பெரிய வித்தியாசம் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நட்புகள் சந்தர்ப்பச் சூழ்நிலையால் அமைவது. ஆனால், வளர் இளம்பருவத்தில் அமையும் நட்பு, ஒருவர் தேடித் தேர்வு செய்து அமைத்துக் கொள்வது. இதை சான்ஸ் எதிர் சாய்ஸ் (chance vs choice) என்று கூறுவதுண்டு.
வளர் இளம்பருவத்தில் தங்களுக்கு ஒத்த வயதுடைய, கருத்துடைய, விருப்பங்களுடைய நபர்களையே தேர்வு செய்து குழுவாகச் சேர்ந்துகொள்வார்கள். அதிலும் ஒரு சிலரைத் தங்கள் நெருக்கமான நட்புக்கென்று தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மையான நட்பு உருவாவதும், இந்த வளர் இளம்பருவத்தில்தான்.
நல்ல மாற்றமா?
இந்த நேரத்தில்தான் பெற்றோருக்குப் பதற்றமும் பயமும் ஏற்படும். தங்களிடம் நெருக்கமாக இருந்த மகன் / மகள் விலகிச்செல்வது போலத் தெரிவதும், புதிய நட்புகளிடம்
பாலியல் தொந்தரவும் பள்ளி புறக்கணிப்பும் (பதின்பருவம் புதிர் பருவமா-4)
சில நேரங்களில் வளரிளம் பெண்கள் பள்ளி செல்லும் வழியில் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவது உண்டு. கேலிப் பேச்சு மூலமாக மன உளைச்சலுக்கு ஆளாதல், சக மாணவர்களால் காதலிக்கக் கட்டாயப்படுத்தப்படுதல் போன்ற வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களும் பள்ளியைப் புறக்கணிக்கக் காரணமாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் வளரிளம் பெண்ணுக்கும் தாய்க்குமான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.
ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி பள்ளியைப் புறக்கணிப்பதாகச் சொல்லிப் பெற்றோர் அழைத்து வந்தார்கள். பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் அவளுக்கு வயிற்றுவலி, வாந்தி வந்துவிடுவதாகவும், அதனால் அடிக்கடி விடுப்பு எடுப்பதாகவும் காரணம் கூறினார்கள். பல முறை ஸ்கேன், மற்றப் பரிசோதனைகளை எடுத்துப் பார்த்ததில் வயிற்றுப் பகுதியில் எந்தத் தொந்தரவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பெண்ணிடம் பேசிப் பார்த்ததில், அவள் பள்ளிக்குச் செல்லும் வழியில்
கற்றல்திறன் குறைபாடு/Dyslexia- 4
சில மாதங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறி மனநல ஆலோசனைக்கு என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள். அந்த மாணவி மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். சமீபத்தில் கையில் பிளேடால் பலமுறை கீறப்பட்ட அடையாளங்கள் இருந்தன.
பெற்றோரிடம் கேட்டபோது, பள்ளிக்குச் செல்ல அவள் மறுப்பதாகவும், வேண்டுமென்றே இப்படிச் செய்வதாகவும் புகாரை அடுக்கினார்கள். ‘இவள் இருப்பதைவிட, செத்துவிட்டால் நல்லது’ என்கிற அளவுக்குத் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்ததில், டிஸ்லெக்சியா (Dyslexia) என்ற கற்றல்திறன் குறைபாடு பிரச்சினையால் அவள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கற்றல்திறன் குறைபாடு
கற்றல்திறன் குறைபாடு கொண்டவர்களின் மனவளர்ச்சியும் அறிவுத்திறனும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு எழுத்து வடிவங்கள் மற்றும் கணிதக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுதல், வாசித்தல் ஆகியவற்றில் அதீதப் பிரச்சினைகள் இருக்கும். வாய்மொழியாகப் பாடங்களை எளிதாகச் சொல்லும் இவர்களால், அதை எழுத முடிவதில்லை. அப்படியே எழுதினாலும்
யார் உங்கள் ரோல்மாடல் (பதின்பருவம் புதிர் பருவமா-3)
‘போதும்டி... ரொம்ப சீவி சிங்காரிக்காதே’ என்று கரித்துக்கொட்டும் அம்மாவைவிட, ‘ஆஹா... இன்னிக்கு எத்தனை பசங்க உங்கிட்ட புரபோஸ் பண்ணப் போறாங்களோ, தெரியலையே!’ என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கும் அம்மாக்களைத்தான், இன்றைய இளம்பெண்கள் பலருக்குப் பிடிக்கிறது.
‘சோம்பேறி... 8 மணிக்குத்தான் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறான்’ என்று திட்டும் அப்பாவைவிட, ‘என்னடா... ‘ஹேங் ஓவரா, எல்லாமே அளவா இருந்தாத்தான்டா நல்லது...’ என்று கேட்டுக்கொண்டே குளிப்பதற்கு டவல் எடுத்துத் தரும் அப்பாக்களை மகன்கள், அப்படிக் கொண்டாடுவார்கள்.
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் என்று சொல்வார்கள், அதுதான் இந்தக் காலத்தின் தேவை.
வெளிப்படைத்தன்மை
எதிர்பாலினத்தவரின் ஏதோ ஒரு அம்சம் நம்மைப் பிடித்து இழுக்கிறது என்ற ஆர்வம் நம் வாரிசுகளிடம் இருப்பது இயற்கை. ஆனால், அந்த ஆர்வம் எல்லை மீறும்போது, பல விபரீதங்கள் நடந்தேறுகின்றன. வாரிசுகளின் ஆண், பெண்
நான் யார்?- பதின்பருவம் புதிர் பருவமா-2
‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.
ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!
பெற்றோரின் பங்கு
இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்..
Subscribe to:
Posts (Atom)