Saturday, 11 June 2016

இண்டர்நெட்-எளிதில் அடிமையாவது யார்? (Risk factors for internet addiction)


தனிமையில் இனிமை
காற்று புகமுடியாத இடங்களில் கூட நுழைந்துவிடும் இணையதளம், அலைக்கற்றைகள் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுவதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்வரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளை பெற்றோர் நேரடியாக கண்காணிக்க முடிந்த்து. “இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற’ என்று பெற்றோரோ, ‘ உங்க பையன் பஸ் ஸ்டாண்டு கிட்ட ஒரு பொண்ணுகிட்ட  ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததை பாத்தேனே’ என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இண்டர்நெட் உலகத்தில் நடப்பதை கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் வலைதளம், மொபைல் போனை உபயோகிப்பதற்கு நேரம் காலம் கிடையாது.
எளிதில் அடிமையாவது யார்?
இணையதளத்தை உபயோகப்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ அது போல சில குறிப்பிட்ட பிரச்சனையுள்ள வளர் இளம்பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
Ø  மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
Ø  இயற்கையாகவே அதிக பதற்ற தன்மை உள்ளவர்கள்
Ø  கூச்ச சுபாவம் உள்ளவர்கள்
Ø  படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்
Ø  கற்றல்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்
Ø  சமூக பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே  கிடைக்கும் குழந்தைகள்
Ø  அதிக துறுதுறுப்பு மற்றும் கவனக்குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள் (ADHD)
Ø  மிதமான அளவு ,ஆட்டிசம் (Autism) என்ற பாதிப்புக்குள்ளானவர்கள்
Ø  தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள்
Ø  அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்
Ø  சிறுவயதிலேயே சமூகவிரோத செயல்கள் மற்றும் வேறு போதைப்பழக்கங்களுக்கு ஆளாகும் வளர் இளம்பருவத்தினர்
என்ன காரணம்?
வளர் இளம்பருவத்தில் “நீ படிப்பதற்காக மட்டும் தான் நேர்ந்து விடப்பட்டிருக்கிறாய்” என்ற அளவிற்கு பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படும்போது அதை ஆரோக்கியமாக கையாள தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியினால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்பு கம்பளம் விரித்த கனவு உலகம் போல காட்சியளிப்பதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு
  • வளர் இளம் பருவத்தினருக்கு தங்கள் மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது
  •  அதிக எதிர்பார்ப்பை திணிக்கும் உலகத்திலிருந்தும், தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது
  • முகம் பார்த்து பேச தேவையில்லாத இணையதள உலகம், அவர்களின் கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாக குறுந்தகவல்கள் மூலமாக எல்லா கருத்துக்களையும் பரிமாறும் மேடையாகின்றது
  • உண்மை உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர் இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் பெறலாம்

No comments:

Post a Comment