Saturday, 11 June 2016

யார் உங்கள் ஆசிரியன்? (Teacher-student-Internet)


இணையதளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பயன்பாட்டுக்கு பின்பு ஆசிரியர் மாணவர் உறவுகளில் பெரிய இடைவெளி ஏற்பட்டு வருவதாக சமீபத்தில் நான் பேசுவதற்காக சென்ற ஆசிரியர்கள் கூட்டத்தின் முடிவில் பல கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இண்டர்நெட்டில் தேடி பதில் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துக்களை கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரங்களில் சமூகவலைதளங்களை தைரியமாக பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையை நிர்பந்தித்தது தான்.
அறிவா? தகவலா?

‘எல்லாம் தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதை கவனிக்கவேண்டும்’ என்ற எண்ணம் பரவலாக மாணவர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. சமூகவலைதளங்களின் மூலமாக தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அவை அறிவுசார்ந்த ( Knowledge )  விஷயங்களாக இருக்க முடியாது. மாறாக அவை தகவல் சார்ந்த ( Information ) விஷயங்களாக மட்டும் இருப்பின் பல சமூக சிக்கல்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற சர்க்கரை வியாதிக்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது சர்க்கரை வியாதிக்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்து கொண்டால் அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத்துறையில் உடல்பருமனைக் குறைக்கவும், சில கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பலருக்கு தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம். இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, டாக்டர் குழந்தையின்மைக்கு சுகர் மாத்திரையை தவறாக கொடுத்து விட்டார் என்ற செய்தியை பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது மருத்துவத்துறையை மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தை தேடிப்பார்த்து தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டு பார்ப்பதே மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்

No comments:

Post a Comment