குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரை
இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் கேம்ஸ் போன்றவை வெளிவிளையாட்டுகளை விட அதிகம்
ஈர்க்கின்றது. தங்களால் ஆதிக்கம் செலுத்த முடிவது, தனிமை மற்றும் மனசோர்வுகளின்
போது அதை தணியச்செய்வது போன்ற காரணங்களால் அதில் அடிமையாகும் அளவுக்கு
மாறிவிடுகின்றனர். மேலும் கொல்வது, சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும்
விளையாட்டுக்கள் நிஜவாழ்க்கையிலும்
அவர்களது நடவடிக்கைகளில் மூர்க்க குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மன சோர்வு, தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
அவர்களது நடவடிக்கைகளில் மூர்க்க குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மன சோர்வு, தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
உடல்நல பாதிப்புகள்
- தூக்கமின்மை மற்றும் பகல்நேர தூக்க கிறக்கம்
- அதிகப்படியான உடல் சோர்வு
- கண் எரிச்சல், பார்வைதிறன் குறைபாடு
- முதுகு மற்றும் கழுத்துவலி
- உடற்பயிற்சி இல்லாமை, நேரம் தவறிய உணவு பழக்கம்
- சில நேரங்களில் வலைதளங்களை பார்த்துக்கொண்டே கொறிப்பதால் உடல் எடை பருமன்
- நோய் எதிர்ப்புசக்தி குறைந்து தொற்றுநோய்கள் ஏறோடும் அபாயம்
- உடல் சுகாதாரத்தை பராமரிக்க தவறுதல்
மனநல பாதிப்புகள்
- எப்போதும் வலைதள பதிவுகளைக் குறித்த ‘எண்ண சுழற்சி’
- தன்னுடைய பதிவுகள் வரவேற்பை பெறுமா என்ற பதற்ற உணர்வு
- பதிவுகள் வரவேற்பை பெறாவிட்டால் தன்னம்பிக்கை இழத்தல், வெறுப்புணர்ச்சி மற்றும் குற்றவுணர்ச்சி
- மன அழுத்த நோய் மற்றும் தற்கொலை எண்ணங்கள்
- கவனக்குறைவு மற்றும் மறதி
- ஸ்மார்ட்போன் மற்றும் வலைதளம் கிடைக்காத நேரங்களில் எதையோ பறிகொடுத்த உணர்வு, தூக்கமின்மை, எரிச்சல்
- ‘போன் தொலைந்துவிடுமோ, இண்டர்நெட் கிடைக்காமல் போய்விடுமோ, பேட்டரி சக்தியை இழந்தால் என்ன செய்வது’ போன்ற பதட்ட உணர்விற்கு நோமோஃபொபியா (Nomophobia) என்று பெயர்
No comments:
Post a Comment