புல்லிங் (Bullying) என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பலவீனமானவனை கொடுமைக்கு உள்ளாக்குதல்’ என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது,
உடல்ரீதியாக துன்புறுத்துவது போன்றவைகள் மட்டும் தான் புல்லிங் என கருதப்பட்டது.
இந்த வகையான நடவடிக்கைகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி
மாணவர்கள் தான். ஆனால் சமீபகாலங்களில்
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மற்றவர்களை மிரட்டுவதற்கு எளிதில்
பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகிவிட்டது. தனக்கு
பிடிக்காதவர்களைப்பற்றி தவறான
தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில்
கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் இன்று
சமூக வலைதளங்களில் மிக சாதாரணமாக நடைபெற்று வரும் சம்பவங்களாகும். இதைத்தான் ‘சைபர் புல்லிங்’ என்று அழைக்கிறார்கள். நமக்கு வேண்டுமானால்
இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இது இளைஞர்களை
சுமார் 40% பேர் வரை பாதிக்கும் முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment