Tuesday, 19 July 2016

இண்டர்நெட்-பெற்றோர் கண்காணிப்பது எப்படி? (Parental supervision of internet use)


ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் அவர்களை கண்காணிக்க உதவும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலை வரை வலைதளத்தை உபயோகிப்பது, கணிணி, லேப்டாப் உபயோகிக்கும் போது அதிகம் தனிமையை நாடுவது, குறுக்கிடும்போது எரிச்சல்படுவது, மொபைல்போனின் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்பநபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, அவர்கள் தேடிய வலைதள வரலாறுகளை முற்றிலும் அழித்துவிடுவது உட்பட பல மாற்றங்கள் காணப்படும்
மென்பொருளும் உதவும்
‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர் இளம்பருவத்தினரின் வலைதள உபயோகத்தை கண்காணிக்க
பல மென்பொருள் செயலிகள் உள்ளன. அவற்றை கணிணியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவுசெய்து விட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை அவர்கள் உபயோகிக்கும் பட்சத்தில் வலைதளம் தானாகவே அணைந்துவிடும். மேலும் அவர்கள் தடை செய்யப்பட்ட வலைதளங்களை பயன்படுத்தினால், அதை குறித்த விபரங்கள் பெற்றோரின் இ-மெயிலுக்கு வந்துசேரும் வகையிலும் மென்பொருள்கள் உள்ளன. பெரும்பாலும் ஆரம்பத்திலேயே தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று தெரிந்தாலே இவர்கள் இணையதளத்தை கவனமாக உபயோகிப்பார்கள்
தடுப்பு வழிகள்
  1.  சிறுகுழந்தைகளை அமைதிப்படுத்தவும், தொந்தரவு இல்லாமல் இருக்க செய்யவும் மொபைல் போன்களை கொடுத்து பழக்குவது தான் பிரச்சனையின் ஆரம்பம். தொட்டில் பழக்கம் கடைசிவரை மாறாமல் போக வாய்ப்புண்டு
  2.   குழந்தைகள் வலைதள விளையாட்டுக்களுக்கு எளிதில் அடிமையாக வாய்ப்புள்ளதால் அவற்றை மொபைல்போன்களில் பதிவிறக்கம் செய்துவைப்பதை தவிர்ப்பது நல்லது.
  3.   முடிந்த அளவு இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் வயதை காலம் தாழ்த்துவது நல்லது. கட்டாயம் தேவைப்படும் சமயங்களில் பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் குறைந்த நேரம் உபயோகிக்க விடலாம்
  4.    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணிணி குறித்த பாடங்களோடு அவற்றை கவனமாக கையாள வேண்டிய அவசியத்தையும், வலைதள அடிமைத்தனத்தின் பின்விளைவுகளையும் குறித்த விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்
  5.    வீட்டில் இருக்கும்போது  சமூக வலைதளம் உபயோகிக்கும் நேரத்தை வரைமுறை செய்யவேண்டும். குடும்ப நபர்களுடன், நண்பர்களுடன் மற்றும் கல்லூரிகளில் இருக்கும்போது சமூகவலைதள உப்யோகங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்
  6.   தேவைப்படும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் இண்டர்நெட் தொடர்பை அணைத்து வைப்பது நல்லது. இதனால் அடிக்கடி சோதித்து பார்க்கும் எண்ண சுழற்சி குறையும்

No comments:

Post a Comment