Friday, 27 May 2016

ஹிஸ்டீரியாவின் அறிகுறிகளும், தீர்வும் (Symptoms of Hysteria)


ஹிஸ்டீரியாவில் வர வாய்ப்புள்ள நோய்கள் 
  • வலிப்பு நோய் 
  • திடீரென ஏற்படும் மயக்கம்  
  • உணர்ச்சியற்ற கோமா போன்ற நிலை 
  • பக்கவாதம் 
  • கை,கால் நடுக்கம் 
  • பேசமுடியாமை 
  • நடக்க இயலாமல் தடுமாற்றம் 
  • உடல் மரத்துபோதல் 
  • மூச்சடைப்பு

இதன் முக்கியத்துவம் என்ன?
இதில் பிரச்சனையே இந்த மனநோயானது நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவது தான். இதனால் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் தேவையான எல்லா பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்ற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம். இல்லையென்றால் ‘பழி ஓர் இடம் பாவம் ஓர் இடம்’ என்பது போல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன் தேவையற்ற மாத்திரை  மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறும்.

வலிப்பில்லாத வலிப்பு
சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவரது அம்மா திடீர்மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் எடுத்தபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறி அழைத்து வந்திருந்தனர். அந்த பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றை தெளிவாக கேட்டுப்பார்த்த போது, 4 வருடங்களுக்கு முன்பு அவரது அப்பா இறந்த பிறகு அந்த பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்து விட்டதாகவும் அதற்கு பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்த பெண்ணின் வலிப்பு அறிகுறியின் தன்மையும், நரம்பு பாதிப்பினால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துபோகவில்லை. மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பினால் தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய்க்கோளாறு பிடித்திருப்பதாகவும் கூறி சூடு போட்டு சிகிச்சை(?) செய்திருக்கிறார்கள். இது ஒரு உதாரணம் தான். உண்மையில் இது போல பலர் தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தை கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிபரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்தவகையை சேர்ந்தவைதான் என்று நிருபித்திருக்கிறார்கள். ஆனால் 25% க்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது. 

எப்படி கண்டுபிடிப்பது?
இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால் பெற்றோர்களுக்கு இது மன நல பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்க வாய்ப்பில்லை தான். ஆனால் சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையை புரிந்து கொள்ளலாம். 
  • இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்களுக்குள் மனதை காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் இருக்கும்
  • அந்த உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லா பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது
  • சில வேளைகளில் அதிக கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல
  • இந்த நோய் அறிகுறிகள் மூலம் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருக்கும். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளிசெல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்த தொந்தரவு திரும்ப ஏற்படும்.
  • அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்கு தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை,கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி இழுக்கும். ஆனால் இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவது போல கூட இருக்கும்
  • இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாதது போல சாதாரணமாகவும் இருப்பார்கள்
  • முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தீவிர பாதிப்புகள் ஏற்படும்.

என்ன சிகிச்சை?
ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாக குணப்படுத்தக்கூடியதே. மனதை பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னோசிஸ்(Hypnosis), நார்கோ பரிசோதனைகள் (Narcoanalysis) உட்பட பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்தநோயின் அறிகுறியாக இருக்குமானால் மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களை திட்டுவதாலோ, வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று கூறுவதாலோ பிரச்சனை கூடுமே தவிர குறையாது. அதே நேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்ககூடாது. அப்பா அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாக பகிர்ந்தளிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். 

ஹிஸ்டீரியா என்றால் என்ன? (Hysteria)



வளர் இளம்பருவத்தில் “வரும் ஆனா வராது” என்பது போல “இருக்கும் ஆனா இருக்காது” என்று வெளிப்படும் ஒருவகை மனநல பிரச்சினை உண்டு. இதை வாசிக்கும்போதே உங்களுக்கு கொஞ்சம் புதிராக இருப்பது போல இந்த நோயும் ஒரு புதிர் நிறைந்தது தான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவர்களை திணறச்செய்த ஒரு நோய்க்கு “ஹிஸ்டீரியா” (Hysteria) என்று பெயர். இதில் நரம்பு பிரச்சனைக்கான அறிகுறிகள் இருக்கும், ஆனால் நரம்புகளில் எந்தவித சேதமோ, மாற்றமோ இருக்காது. மனரீதியான பிரச்சனைகள் தான் அதற்கு காரணமாக இருந்ததை கண்டுபிடித்து “ஹிப்னோசிஸ்” (Hypnosis) என்ற முறையில் அதற்கு தீர்வுகாணும் முயற்சியில் வெற்றியும் கண்டார் பாரீசில் பிறந்த பிரபல நரம்பியல் நிபுணர் ஜீன் மார்டின் சார்கோட். அவரிடம் சிலகாலம் பயிற்சி மேற்கொண்ட சிக்மண்ட் ஃப்ராய்டு இதை மேலும் ஆழமாக ஆய்வு செய்து உளபகுப்பாய்வு சிகிச்சை (Psychoanalysis) முறையை நடைமுறைக்கு கொண்டுவந்ததால் உளபகுப்பாய்வின் தந்தை என்ற பெயரை பெற்றார். .
ஹிஸ்டீரியா எப்படி உருவாகிறது?
இந்த சிக்மண்ட் ஃப்ராய்டு தான் உடலின் பாகங்கள் போல மனதிற்கும் கட்டமைப்பு உண்டு என்று வெளியிட்டார். அவரின் கூற்றுபடி எல்லா மனிதருக்கும் ஆழ்மனது, சுய உணர்வுடன் கூடிய வெளிமனது என இரண்டு உண்டு. நாம் பிறந்தது முதல் இன்றுவரை நடந்த எல்லா அனுபவங்களும் முழுமையாகவோ அல்லது சிறுபகுதியாகவோ ஆழ்மனதில் கணிணியின் ஹார்டு டிஸ்க்கில் பதிவது போல பதிந்து கொண்டேவரும். ஆனால் எது பதிகின்றது என்பது வெளிமனதுக்கு தெரிவதில்லை. பதிந்த விசயங்கள்

Thursday, 26 May 2016

மன அழுத்த நோயைக்குறித்த ‘தவறான நம்பிக்கைகள்’:


  
  • இவர்கள் சோம்பேறிகள், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்
  •   தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்  மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் தங்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்
  • படிப்பில் ஆர்வம் இல்லாததால் வேண்டுமென்றே செய்கிறார்கள்
  •  பொறுப்புகளை தட்டிக்கழிப்பதற்கான ஒரு வழியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்
  • அவர்களின் குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர்களாக முன்வந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும்
  • மன அழுத்தத்திற்கு மருத்துவம் இல்லை, அட்வைஸ் பண்ணுவதன் மூலமாகவோ, மதரீதியான செயல்கள் மூலமாகவோ குணப்படுத்திவிடலாம்
  •  மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகிவிடுவார்கள்
  • மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்கவைப்பதற்கு தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமாகும். இதற்கான மாத்திரைகள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளை சமநிலைப்படுத்தவே கொடுக்கப்படுகிறது

மன அழுத்தம் விளையாட்டு அல்ல..


வேண்டாம் விபரீத விளையாட்டு
நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிறுவலி வந்தால் ‘ அவனுக்கு தைரியம் இல்லை’ என்றோ ‘நீ நினைச்சா வயிற்றுவலியை நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் அது எதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அது போல் மனஅழுத்தமும் ஒரு நோய் தான். இது ஒரு நோய்நிலை என்பதை பலதரப்பினரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாமதிப்பதும் வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலை வரை சென்றுவிடுகிறது. சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர் தான் இவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டது தெரியவரும். அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சனையாகத் தான் இன்னமும் உள்ளது. எனவே ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் தாழ்வுமனப்பான்மையா?
பல நேரங்களில் மனஅழுத்தம் என்பது தாழ்வுமனப்பான்மைக்கு ஈடான ஒன்றாக தவறாக கருதப்படுவதும் சிகிச்சைக்கு செல்ல காலம் தாழ்த்துவதற்கு காரணமாகிறது.

மன அழுத்தநோய்: தடுப்பு மற்றும் சிகிச்சை


  • Ø  தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளி விளையாட்டுகளில் ஈடுபடுதல் நல்லது
  • Ø  குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மன பாரங்களை பகிர்தல் அவசியம்
  • Ø  புத்தகங்கள் வாசிப்பது, இசைக்கருவிகளை வாசிக்க பயிற்சி எடுக்கலாம்
  • Ø  நேரத்தை பகிர்ந்து செலவிட கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)
  • Ø  வேலைகளை பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது மற்றும் பெரிய வேலைகளை பகுதிபகுதியாக பிரித்து செயல்படலாம்
  • Ø  பிரச்சனைகள் எப்போதுமே நிரந்தரமானது அல்ல, பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளவேண்டும்.
  • Ø  பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து பிடித்து, சில நொடிகளுக்கு பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விடவேண்டும்.
  • Ø  பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவி கட்டாயம் தேவைப்படும்.
  • Ø  தீவிரமான மனஅழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாக பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும். 

மன அழுத்த நோயின் அறிகுறிகள் (signs of depression)


கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்

  • Ø  வழக்கத்திற்கு மாறான மந்தத்தன்மை
  • Ø  சுறுசுறுப்பு இல்லாமல் அதிக சோர்வுடன் காணப்படுவது
  • Ø  முன்பு நாட்டமுள்ள விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லாமல் ஒதுங்கியிருப்பது
  • Ø  தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது
  • Ø  பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு
  • Ø  காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது, முயற்சி செய்வது
  • Ø  தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
  • Ø  தான் எதற்கும் உதவாதவன், வாழ தகுதியற்றவன் என்ற எண்ணம்
  • Ø  அதீத குற்ற உணர்ச்சி
  • Ø  எரிச்சல் தன்மை, கோபம்
  • Ø  படிப்பில் பின்தங்குதல், பள்ளியை புறக்கணித்தல்
  • Ø  காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது
  • Ø  புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்
  •        அதிக கவனக்குறைவு, ஞாபக மறதி
   தற்கொலையின் தூதன்

   வளர் இளம்பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்கு அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை

மன அழுத்தம் ஒரு நோயா? Depressive disorder


“உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்கு கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும். “உன்னை பெத்ததுக்கு ஒரு  தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படி தண்டமா உட்கார்ந்திருக்கியே” என பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில் அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயிலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மன அழுத்தம் ஒரு நோயா?
நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன் என்று எல்லோரும் சாதாரணமாக கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரசன் நோய் (Depressive disorder) என்பது வேறு. இது சுமார் 10-15% வரையிலான வளரிளம் பருவத்தினரை பாதிக்கும் அளவிற்கு பரவலான ஒன்று. இது ஏதாவது மோசமான வாழ்க்கை சூழலினாலும் ஏற்படலாம், எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் கூட தானாகவும் ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்து கூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள்

இளம் சமூகவிரோதிகளை அடையாளம் காணுதல்


ஓட்டம் பிடித்தல்
ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர் இளம்பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது ஓடிப்போவது உண்டு. இது ‘நாங்கள் குணரீதியாக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்’ என பெற்றோருக்கு மறைமுகமாக சொல்லும் எச்சரிக்கையாகும். அதற்கு முன்னரே இவர்கள் அடிக்கடி இரவில் வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்கு செல்லாமல் அடிக்கடி படத்துக்கு செல்வதும் ஒரு முக்கிய மாற்றம் தான்.
கும்பல் சேருதல்
உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ கூட்டம் கூடுவார்கள். இங்கு தான் இளம் சமூகரோதிகள் உருவாகும் இடம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாக சேர்ந்த்து புகைப்பது முதல் கஞ்சாவை உபயோகிப்பது வரை கற்றுக்கொள்வார்கள். இவர்களுக்குள் தன்பாலின உறவும் ஏற்பட

Thursday, 19 May 2016

இளம் சமூகவிரோத செயல்கள் எப்படி உருவாகின்றன?

சமீபகாலமாக பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் பெருகிவருவது வளர் இளம்பருவத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரிமாணவர்களிடையே அடிக்கடி கைகலப்புகள் முதல் கொலைச் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறிவருகின்றது. சில நேரங்களில் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்கு பிரச்சினை உருவாகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கும்போது விபரீதங்கள் நடக்கிறது.
குற்ற உணர்ச்சியற்ற நிலை
எல்லா வளர் இளம்பருவத்தினரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். பெரும்பாலும் இவர்களின் குடும்பசூழல் திருப்திகரமாக இருக்காது. சிறிய பிரச்சினைகளுக்கு கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களை உபயோகிப்பது, பிறருக்கு கொலைமிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையை கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வித்தியாசங்கள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்திற்குரியவர்கள்.