சமீபகாலமாக பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் பெருகிவருவது வளர் இளம்பருவத்தினருக்கும்,
ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரிமாணவர்களிடையே அடிக்கடி
கைகலப்புகள் முதல் கொலைச் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறிவருகின்றது. சில நேரங்களில்
ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்கு பிரச்சினை உருவாகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை
தண்டிக்கும்போது விபரீதங்கள் நடக்கிறது.
குற்ற உணர்ச்சியற்ற நிலை
எல்லா வளர் இளம்பருவத்தினரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. ஆனால்
இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்எச்சரிக்கை அறிகுறிகள்
காணப்படும். பெரும்பாலும் இவர்களின் குடும்பசூழல் திருப்திகரமாக இருக்காது. சிறிய
பிரச்சினைகளுக்கு கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களை உபயோகிப்பது, பிறருக்கு
கொலைமிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையை கிழித்துக்கொள்வது அல்லது
அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வித்தியாசங்கள் காணப்பட்டால் நிச்சயம்
அவர்கள் கவனத்திற்குரியவர்கள்.
சிறுவயதில் போதைப்பொருட்களை உபயோகிப்பது தான் தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கிய காரணமாகும். இதற்கு எல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் செயல்கள் தவறு, மற்றவர்களை பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சியற்ற மனநிலை தான். இதுதான் இளைஞர்களை கூலிப்படையினராக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
சிறுவயதில் போதைப்பொருட்களை உபயோகிப்பது தான் தற்போது நடக்கும் பல்வேறு ஆக்ரோஷமான சம்பவங்களுக்கு முக்கிய காரணமாகும். இதற்கு எல்லாம் அடிப்படையாக இருப்பது, தான் செய்யும் செயல்கள் தவறு, மற்றவர்களை பாதிக்கும் என்ற குற்றவுணர்ச்சியற்ற மனநிலை தான். இதுதான் இளைஞர்களை கூலிப்படையினராக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
விதிமுறை மீறல்கள்
வளர் இளம்பருவத்தினர் அவ்வப்போது சில விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது சகஜம்
தான். ஏனென்றால் அது அவர்களின் வளர்ச்சியில் ஒரு பாகமாகவே காணப்படும். ‘இளம்கன்று
பயம் அறியாது’ என்று சொல்வது மிகச்சரியானது தான். எதையும் பரீட்சித்து பார்க்கும்
எண்ணம், புதிய விஷயங்களில் நாட்டம், விபரீதங்கள் மற்றும் பின்விளைவுகளைப் பற்றி
கவலைப்படாத தன்மை போன்றவை சில நேரங்களில் இவர்களை சேட்டைகளில் ஈடுபடவைக்கிறது.
அதிலும் பலர் தங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது இது கூடும். எதிர்பாலினரைக்
கவர்வதற்கு என்று இவர்கள் எடுக்கும் பல முயற்சிகள் மற்றவர்களை முகம்சுழிக்க
வைக்கும். சில வருடங்கள் கழித்து யோசித்துப் பார்த்தால் தான் தெரியும், தான்
எத்தனை கோமாளித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்று.
உருவாகும் சமூகவிரோதிகள்
அதேசமயம் சில வளர் இளம்பருவத்தினரிடம் இந்த விதிமுறை மீறல்கள் எல்லை
மீறிச்செல்லும் போது அவர்களின் குணாதிசயங்கள் உருவாவதிலும் மாற்றம் காணப்படும்.
சமூகவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படும் எல்லோரும் திடீரென்று உருவாவதில்லை.
அதற்கான ஆரம்ப அறிகுறிகள் வளர் இளம்பருவத்திலேயே காணப்படும். பெற்றோருக்கும்
ஆசிரியருக்கும் இவர்கள் ஒரு கடும் சவாலாகவே இருப்பார்கள். சிறுவயதில் தண்டனைகள்
எவ்வளவு கொடுத்தாலும் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள இயலாது. மாறாக பிரச்சினை
தீவிரமடையும். இவர்கள் தான் பின்னாட்களில் சமூகவிரோதிகளாக ( Antisocial ) உருவாக வாய்ப்பு இருக்கிறது
No comments:
Post a Comment