Thursday, 26 May 2016

மன அழுத்த நோயின் அறிகுறிகள் (signs of depression)


கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்

  • Ø  வழக்கத்திற்கு மாறான மந்தத்தன்மை
  • Ø  சுறுசுறுப்பு இல்லாமல் அதிக சோர்வுடன் காணப்படுவது
  • Ø  முன்பு நாட்டமுள்ள விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லாமல் ஒதுங்கியிருப்பது
  • Ø  தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது
  • Ø  பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு
  • Ø  காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது, முயற்சி செய்வது
  • Ø  தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
  • Ø  தான் எதற்கும் உதவாதவன், வாழ தகுதியற்றவன் என்ற எண்ணம்
  • Ø  அதீத குற்ற உணர்ச்சி
  • Ø  எரிச்சல் தன்மை, கோபம்
  • Ø  படிப்பில் பின்தங்குதல், பள்ளியை புறக்கணித்தல்
  • Ø  காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது
  • Ø  புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்
  •        அதிக கவனக்குறைவு, ஞாபக மறதி
   தற்கொலையின் தூதன்

   வளர் இளம்பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்கு அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை
பல காரணங்கள் இருந்தாலும், மன நோய்களை பொறுத்தவரை முதல் காரணம் மன அழுத்த நோய்தான். மன அழுத்தம் தீவிரமடையும்போது சில நேரங்களில் தற்கொலை செய்துகொள்ளும்படி யாரோ காதில் பேசுவது போலவும் குரல்கள் கேட்கும். இந்த மாயக்குரலுக்கு “ஹாலுசினேசன்” (Hallucination) என்று பெயர். மன அழுத்த பாதிப்புகள் மட்டும் இருந்தால் கூட சிகிச்சைக்கு அழைத்து வரப்படும் இளசுகள், இப்படி ஒரு குரல் பேசுவதாக சொல்லி விட்டால் கண்டிப்பாக பேயோட்ட கூட்டி சென்றுவிடுவார்கள். ஆனால் இதுவும் மன அழுத்தம் மோசமடையும் போது ஏற்படலாம். மருந்துகள் உட்கொண்ட ஓரிரு நாட்களில் தற்கொலை எண்ணங்கள் மறைந்து பழைய மனநிலைக்கு இவர்கள் மாறுவதை நாங்கள் தினமும் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  

No comments:

Post a Comment