251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பனை என்று
அறிவிப்பு வந்த இரண்டு நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு
செய்ததால், அந்த நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டதாம். இது நம் மக்களின் மோகம்
போகும் வேகத்திற்கான ஒரு சான்று தான். எல்லாம் டிஜிட்டல் மயமாவது பல சவுகரியங்களை
தந்தாலும் அதில் உள்ள பிரச்சனைகளை வழக்கம் போல நம் அதிகார வர்க்கங்கள் உணர்ந்த
மாதிரி தெரியவில்லை. உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநல பிரச்சனையாக
எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநல பாதிப்புகள்
ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பத்து வருடங்கள் முன்னோடியாக சீனாவும்,
தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியை பின்பற்றி பள்ளி, கல்லூரி
மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம்
இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது
மனக்கண்ணாடி
Rehoboth Neuropsychiatry Center,Palayamkottai,Tirunelveli-2 ;Contact 9677655112
Labels
Tuesday, 19 July 2016
இணையதள அடிமைத்தனம்-வெளிவர வழி உண்டா?(Solutions for internet addiction)
இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றிற்கு
அடிமையாகும் வளர் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே
வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒருவேளை அடிமையாகி விட்டால் என்ன செய்வது?
இதனால் படிப்பு மற்றும் மனநிலை பாதித்துவிட்டதே? என்று பல பெற்றோர்கள் புலம்புவதை
அடிக்கடி பார்த்துவருகின்றோம். இணையதள அடிமைத்தனத்திற்கென்றே மனநல சிகிச்சைகள்,
ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை அதை மீண்டும்
உபயோகிப்பதை தடுப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு சிகிச்சைகள்
அளிக்கப்படுகின்றன. ஆனால்
இண்டர்நெட்-பெற்றோர் கண்காணிப்பது எப்படி? (Parental supervision of internet use)
ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி
பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் அவர்களை
கண்காணிக்க உதவும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலை வரை வலைதளத்தை உபயோகிப்பது,
கணிணி, லேப்டாப் உபயோகிக்கும் போது அதிகம் தனிமையை நாடுவது, குறுக்கிடும்போது
எரிச்சல்படுவது, மொபைல்போனின் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது,
குடும்பநபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, அவர்கள் தேடிய வலைதள வரலாறுகளை
முற்றிலும் அழித்துவிடுவது உட்பட பல மாற்றங்கள் காணப்படும்
மென்பொருளும் உதவும்
‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர்
இளம்பருவத்தினரின் வலைதள உபயோகத்தை கண்காணிக்க
சைபர் புல்லிங் ( Cyber Bullying )
புல்லிங் (Bullying) என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பலவீனமானவனை கொடுமைக்கு உள்ளாக்குதல்’ என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது,
உடல்ரீதியாக துன்புறுத்துவது போன்றவைகள் மட்டும் தான் புல்லிங் என கருதப்பட்டது.
இந்த வகையான நடவடிக்கைகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி
மாணவர்கள் தான். ஆனால் சமீபகாலங்களில்
பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மற்றவர்களை மிரட்டுவதற்கு எளிதில்
பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகிவிட்டது. தனக்கு
சைபர் செக்ஸ் (Cyber sex)
வளர் இளம்பருவத்தில் ஏற்படும் பாலியல் மீதான
நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம்
பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரகசியமாக செய்ய
முடிவது, வெளியில் சொல்லமுடியாத கற்பனைகளை நேரில் சொல்வதை விட சாட் ரூம் என்ற
பகுதியில் எதிர்பாலருடன் பகிர்ந்து கொள்வது எந்தவித பதற்றத்தையும் ஏற்படுத்தாது. எங்கும் எப்போது வேண்டுமானாலும் கிடைப்பது பொன்றவைகளே
வளர் இளம்பருவத்தினர் வலைதளங்களில் சைபர் செக்ஸில் ஈடுபட காரணங்கள் ஆகும்.
ஏனென்றால் வலைதள யுகத்திற்கு முன்பு ஓரமாக உள்ள பெட்டிக்கடைகளிலோ, ஆர்வக்கோளாறு
உள்ள அண்ணன்மார்களிடமோ மட்டுமே கிடைக்கக்கூடிய மஞ்சள் புத்தகங்கள் இப்போது வீட்டு
அறைக்குள்ளாகவே கிடைத்து விடுகிறது.
குறுந்தகவல்கள் மூலமாக பாலியல் விருப்பங்களை
பகிர்ந்து கொள்ளுதல், வெப் கேமராக்கள்
ஆன்லைன் ஆபத்துகள் (adverse effects of internet)
குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரை
இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் கேம்ஸ் போன்றவை வெளிவிளையாட்டுகளை விட அதிகம்
ஈர்க்கின்றது. தங்களால் ஆதிக்கம் செலுத்த முடிவது, தனிமை மற்றும் மனசோர்வுகளின்
போது அதை தணியச்செய்வது போன்ற காரணங்களால் அதில் அடிமையாகும் அளவுக்கு
மாறிவிடுகின்றனர். மேலும் கொல்வது, சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும்
விளையாட்டுக்கள் நிஜவாழ்க்கையிலும்
புதைக்கப்படும் உணர்ச்சிகளும்,அறிவும் (Internet kills your emotions and knowledge)
புதைக்கப்படும் உணர்ச்சிகள்
சமீபத்தில் நடிகர் விஜய சேதுபதி “பேஸ்புக்
என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட்
செய்து அதிலிருந்து விலகிவிட்டேன்” என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது எனக்கு
மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது தான் தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவுகளும்
கூட. ஒருவேளை நடிகர் விஜய சேதுபதி, சமூகவலைதளங்களின் பாதிப்புகளை குறித்து விளம்பர
தூதுவராக நடிப்பது கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஸ்மைலிகள் பயன்படுத்தும் பலரின் முகத்தில்
உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறாது. சமூகம் உருவாவதே தனிமனிதனிடம் இருந்து தான்.
ஒருவருக்கொருவர் முகம் பார்த்து
Subscribe to:
Posts (Atom)