ஒரு நகைச்சுவை காட்சியில் வயிற்று வலி வந்த நோயாளியை சுற்றி பல டாக்டர்கள்
நிற்பார்கள். ஒருவர் குடல் நோய் மருத்துவர், உடனடியாக குடல் அறுவை சிகிச்சை
செய்யவேண்டும் என்பார். சிறுநீரக மருத்துவர் கிட்னியில் இருக்கும் கல்லை
உடைக்கவேண்டும் என்றும், எலும்பு மருத்துவர் எலும்பில் உடனே பிளேட் மாட்டவேண்டும்
என்றும் கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு சிறப்பு மருத்துவர்களும் ஒவ்வொன்றை கூற
நோயாளி மயங்கி விடுவார். இது ஒரு நகைச்சுவைகாகத்தான் என்றாலும் பதினந்து முதல் இருபது
வருடங்களுக்கு முன்பு வரை இருந்து தற்போது மறைந்து வரும் மருத்துவ உலகின் ஒரு
உண்மையை நினைவு கூற வேண்டிய கட்டாயமும் உள்ளது.
யார் இந்த குடும்ப மருத்துவர்?
இது ஒரு டாக்டர் பேமிலி என்று சொல்ல கேள்விபட்டிருப்போம். ஆனால் பேமிலி
டாக்டர் என்று அழைக்கப்படும் குடும்ப மருத்துவர்
என்பவர் யார் என்று தெரிந்து கொள்வது அவசியம்.முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு சிறுவயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டும் அழைத்து செல்வது வழக்கம். அந்த குடும்ப நபரின் உடல்நிலை,அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலை, எந்த மருந்து ஒத்து போகும் எது ஒவ்வாமை ஏற்படுத்தும் என்ற விபரங்களெல்லாம்
அவருக்கு மட்டுமே அத்துப்படியான விஷயம்.ஒரு வேளை அவர் தனது
மருத்துவ வரம்புக்கு மீறிய நோயாக இருப்பின் எந்த சிறப்பு மருத்துவரிடம் அல்லது உயர்
சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பதை உங்களுக்கு வழிகாட்டும் அல்லது
முடிவுஎடுக்கும் முக்கிய நபர்களில் ஒருவராக இந்த குடும்ப மருத்துவர் இருப்பார்.என்பவர் யார் என்று தெரிந்து கொள்வது அவசியம்.முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு சிறுவயதிலிருந்தே எந்த நோயாக இருந்தாலும் நன்கு பரிச்சயமான ஒரு மருத்துவரிடம் மட்டும் அழைத்து செல்வது வழக்கம். அந்த குடும்ப நபரின் உடல்நிலை,அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகள், குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலை, எந்த மருந்து ஒத்து போகும் எது ஒவ்வாமை ஏற்படுத்தும் என்ற விபரங்களெல்லாம்
நோய்க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
ஒரு நோயாளியின் நோயை கண்டறிவது மற்றும் குணப்படுத்துவதில் அந்த நோயாளிக்கும்
மருத்துவருக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளலை அடிப்படையாகக்
கொண்ட ஒரு உறவு (doctor patient relationship ) தான் அடித்தளம் என
கூறுகிறார் எக்கிஹார்டு ஒத்மர் என்ற மருத்துவ அறிஞர்.. ஒரு நோயாளி மருத்துவரிடம் கொண்டுள்ள நம்பிக்கை, எதிபார்ப்பு மற்றும்
உணர்ச்சிகள் தான் மருத்துவர் நோயாளி என்ற உறவை மேம்படுத்துவதுடன் நோய் குணமடைய ஒரு
காரணியாகவும் அமையும் என உளபகுப்பாய்வின் தந்தை என்றழைக்கப்படும் 19 ம் நூற்றாண்டின் மனநல மருத்துவர் சிக்மண்ட் ஃப்ராய்டு (Sigmund freud) தெளிவாக விளக்கியுள்ளார். தாய்- குழந்தை உறவு
வளர்ச்சிக்கும், கணவன்- மனைவி உறவு வாழ்க்கைக்கும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு
இந்த மருத்துவர் நோயாளி உறவு என்பது மன ரீதியாக மட்டுமல்ல, உடல் நோய்களும்
குணமடைதலில் மருந்துகளுக்கு நிகரான முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய நிலை
இன்றைக்கு இத்தகைய மதிப்பு வாய்ந்த உறவு வெறும் சேவை அளிப்பவர்- வாடிக்கையாளர்
என்ற நிலைக்கு மாறிவருவதற்கு இருதிறத்தாருமே பொறுப்புதான். பெரிய மால்களில் இன்று
பலர் விண்டோ ஷாப்பிங் செய்வதுண்டு. அது போலதான் பல நோயாளிகள் அவர்களாகவே ஒரு
முடிவுக்கு வந்து ஒவ்வொரு நோய் அறிகுறிக்கும் ஒவ்வொரு சிறப்பு நிபுணர்களை தேடி ஏறி
இறங்கும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது திருப்திக்காக ஒரே பிரச்சினைக்கு கூட பல
மருத்துவ ஆலோசனையை நாடும் நிலை உள்ளது. இதை டாக்டர் ஷாப்பிங் என்று சொல்வதை தவிர
வேறு வழி இல்லை.
இதன் விளைவுகள் என்ன?
சுருக்கமாக சொன்னால் பல மெக்கானிக் கையில் சிக்கிய காரின் கதை தான்.
மொத்தத்தில் பரஸ்பரம் புரிந்து கொள்ளல் மற்றும் மருத்துவர் நோயாளி என்ற உறவு ஏற்பட
இரு பக்கத்தில் உள்ளவர்களும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்பதே உண்மை. இந்த
குடும்ப மருத்துவர் என்ற முறை மாறிவருவதால் நோய் கண்டறிவதில் காலதாமதம், வீண்
அலைச்சல், பணவிரயம் ஏற்படுவதுடன் மருத்துவத்தின் மீதான நம்பிகையும் குறைகிறது.
மேலும் முன் காலங்களை காட்டிலும் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவ ஊழியருக்கும்
இடையே ஏற்படும் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு மருத்துவருக்கும் நோயாளிக்கும்
இடையேயான கருத்துபரிமாற்றத்திலுள்ள இடைவெளி (communication gap) அதிகரித்துள்ளதே காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இதனால் சிறப்பு மருத்துவர்களை பார்ப்பதே தேவை இல்லை என்று அர்த்தம் அல்ல. அது
பல நேரங்களில் அவசியமான ஒன்று தான். ஆனால் குடும்ப மருத்துவர் முறை என்பது
அதைக்காட்டிலும் அதிக நன்மைகள் நிறைந்த விஷயமாகும்.பல பாராம்பரியங்களை நவீன
மயமாக்குதலை காரணம் காட்டி நாம் மறந்து போயிருந்தாலும் நலம் பயக்கும் இந்த
மருத்துவர் நோயாளி உறவைப் பேணினால் எதிர்கால சந்ததிகளின் நல வாழ்வு நிச்சயம்.
No comments:
Post a Comment