தண்டனைகள் தேவையா?
பள்ளி ஆசிரியர் என்றாலே கையில் கம்புடன் நிற்பது தான்
மனதில் பிம்பமாய் தோன்றும். ஆனால் இன்றைய நிலைமை வேறு, கம்பு எடுத்தால் அவருக்கு
கைவிலங்குதான். குழந்தைகளுக்கு தண்டனைகள் கண்டிப்பாக தேவைதான், ஆனால் கொடுக்கும்
விதம் அதைவிட அவசியம்.
- தவறான செயல்கள் அவற்றின் தீவிரத்திற்கு ஏற்ப உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். காலம் தாழ்த்துவது எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.
- தண்டனைகள் வயதுக்கு ஏற்றவையாக இருத்தல் அவசியம். ஆத்திரப்படுதலை தவிர்ப்பது நலம்.
- குழந்தைகளுக்கு நாம் ஏன் தண்டிக்கப்படுகிறோம் என்பது கண்டிப்பாக புரிந்திருத்தல் அவசியம்.
- அறியாமல் செய்த தவறுகளை தண்டிக்க கூடாது. உதாரணமாக கையில் உள்ள டம்ளர் தவறி விழுவதால் தண்ணீரை கொட்டுவது 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான். இதுமாதிரியான விஷயங்களுக்கு அவசரப்பட்டு தண்டித்தல் கூடாது.
- ஒரு குழந்தை விரும்பதகாத செயலில் ஈடுபட்டால் அக்குழந்தைக்கு மிகவும் பிடித்தமானவைகளை கிடைக்காமல் நிறுத்தி வைக்கலாம். உதாரணமாக 5-10 நிமிடங்கள் சுவர்புறமாக திரும்பி உட்காரவைப்பது, அன்றைக்கு விளையாடும் அல்லது டிவி பார்க்கும் நேரத்தை குறைப்பது, சிறிது நேரம் அவனுடன் பேச மறுப்பது போன்றவை நல்ல பலனை கொடுக்கும்.
- செய்த தவறை அக்குழந்தையையே திருத்தும்படி செய்தால் அத்தவறுகளை திரும்ப செய்யும் வாய்ப்பு நாளடைவில் குறையும். உதாரணமாக வேண்டுமென்றே தின்பண்டத்தை கீழே கொட்டினால் அதை அக்குழந்தையையே திரும்ப அள்ளச் சொல்லி கட்டளையிடலாம்.
சர்க்கஸில் டால்பின்
பந்து விளையாடுவதை டிவியில் பார்த்திருப்போம். ஆனால் நன்றாக பந்தை கையாண்டு விட்டு
தண்ணீருக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும் பயிற்சியாளர் நொடிப்பொழுதில் வீசும் மீன்
துண்டை சுவப்பது எத்தனைபேருக்கு தெரியும். அதில் தான் இந்த நடத்தை பயிற்சியின்
சூட்சுமமே இருக்கிறது. ஒரு விலங்கையே இப்பயிற்சியின் மூலம் மாற்ற முடிந்தால்
நிச்சயமாக குழந்தை வளர்ப்பிலும் இது நல்ல பலனை தரும். என்ன கொஞ்சம் பொறுத்திருக்க
வேண்டும். BEHAVIOURISM என்ற கொள்கையை முன் வைத்த ஜான் வாட்சன் என்ற அறிஞர் 1926
ல் ஓர் சவால் விடுத்தார். “வேறுபட்ட
திறமைகள் வாய்ந்த டஜன் குழந்தைகளை என்னிடம் கொடுங்கள். ஒவ்வொருவரையும் நான்
விரும்பியபடி மாற்றிக்காட்டுகிறேன்; டாக்டராக, எஞ்சினியராக, வக்கீலாக,
தொழிலதிபராக; ஏன் திருடனாக, பிச்சைக்காரனாக கூட” என்று. முயற்சித்து தான்
பாருங்களேன்!
No comments:
Post a Comment