- நிஜத்தில் நடக்காத அல்லது கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயத்தை உண்மையில் நடப்பது போல் மிக உறுதியான எண்ணம் கொண்டிருத்தல். உதாரணமாக ஒருவருக்கு எதிரிகள் இருப்பது போன்றோ அல்லது வீட்டில் உள்ளவர்கள் அவரை விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாக நினைத்தல், எல்லோரும் தன்னைக் குறித்தே கேலி அல்லது ரகசியம் பேசுவது போலவும் தோன்றுதல்.
- தன்னை கடவுளாகவோ, தனிச்சிறப்பு பெற்ற பிறவியாகவோ காண்பித்துக்கொள்ளுதல்
- வாழ்க்கை துணையின் மீது காரணமற்ற சந்தேகம், வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறான, தீவிரமான சந்தேக எண்ணம்
- மனதிற்குள் யாரோ பேசுவது போல மாயக்குரல்கள் கேட்பது, தன்னை யாரோ கட்டுப்படுத்துவதாக சொல்லுதல்
- ஒருவரும் இல்லாத நேரத்திலும் மனித உருவங்களோ, காட்சிகளோ கண்ணுக்கு தெரிதல்
- சம்பந்தமில்லாத,அர்த்தமில்லாத பேச்சு, தானாய் பேசுவது மற்றும் சிரிப்பது.
- ஆக்ரோஷமான நடவடிக்கைகள், பொருட்களை உடைப்பது
- தூக்கமின்மை, தன்னை பேணாமல் இருத்தல்
- தற்கொலை எண்ணங்கள் அல்லது முயற்சி, காணாமல் போதல்
- சிலவேளைகளில் மேற்குறிப்பிட்ட எந்த அறிகுறியும் இல்லாமல், யாருடனும் பேசாமல் பழகாமல் ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போன்ற நிலை மட்டும் கூட இதன் அறிகுறியாக இருக்கலாம்.
Labels
Saturday, 25 April 2015
மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் (Symptoms of Schizophrenia)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment