பொதுவாக கையாள வேண்டிய விஷயங்கள்
- நாட்டமுள்ள நல்ல விஷயங்களை ஊக்குவிப்பது, தகுதி மற்றும் வயதுக்கு மீறிய விஷயங்களை தடை செய்வது
- பிள்ளைகளின் தேவைகளை சரியாக புரிந்து கொள்ளுதல்
- நம் விருப்பங்களை பிள்ளைகளிடம் ஒரு அளவுக்கு மேல் திணித்தல் கூடாது.
- பெற்றோரின் மனநிலை, கோபங்கள், மனஸ்தாபங்களை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தல் தவிர்க்க வேண்டும்
- மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிற விஷயங்களில் கண்டிப்பை தளர்த்தாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு குழந்தை யாரைப் பார்த்தாலும் அடிக்கிறது அல்லது கடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பெற்றோர் அதை கண்டிப்பார்கள், சில நேரங்களில் தாத்தா, பாட்டிகள் என் பேரன் அடிக்கிறது சுகமாக இருக்கிறது என் அதை ஊக்குவிப்பதுண்டு. இதனால் குழந்தைகள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது.
- குழந்தைகள் அடம்பிடிக்கும் விஷயங்களை தொந்தரவு செய்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நிறைவேற்ற கூடாது. கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் சில நாட்களில் தீவிரம் குறைந்து விடும். சுருக்கமாக சொன்னால் குழந்தைகளின் மிரட்டலுக்கு பெற்றோர் அடிபணியக் கூடாது.
- அழுது அடம் பிடித்துக்கொண்டிருக்கும் விஷயத்தை மாற்ற போராடுவதை விட வேறு விஷயத்தில் குழந்தையின் கவனத்தை திசை திருப்புவது எளிது.
- ஒரு விஷயத்தை செய்யாதே என திரும்ப திரும்ப சொல்வதைவிட, வேறொன்றை செய் என வழிகாட்டி சொல்வது பலனளிக்கும்.
- டிவி பார்க்கும் நேரத்தை வரைமுறை செய்து வைத்து உங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது நல்லது.
- மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதை தவிர்ப்பது நல்லது.
உற்சாகபடுத்துங்கள்
- நல்ல பழக்கவழக்கங்களை செய்யும்போதோ அல்லது ஒரு விரும்பதகாத பழக்கத்தில் மாற்றம் ஏற்படும்போதோ உடனடியாக உற்சாகப்படுத்துங்கள். உங்கள் ஊக்குவிப்பு சாதாரண பாராட்டு, தட்டிகொடுத்தலில் இருந்து சிறிய பரிசுபொருட்கள், சாக்லேட்டாக கூட இருக்கலாம்
- நீங்கள் நியமித்த குறிக்கோளை பிள்ளைகள் அடைந்தால் மட்டுமே வாக்குறுதி கொடுத்த பரிசையோ, பொருட்களையோ கொடுங்கள்.
- பாராட்டும்போதோ, பரிசுகொடுக்கும்போதோ ‘நீ இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாய் அல்லது இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டிருக்கிறாய், அதற்காகத் தான் இந்த பரிசு’ என நினைவுபடுத்தி கொடுங்கள்.
No comments:
Post a Comment