தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படுவது இயல்பான ஒன்று
தான். ஆனால் அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளிடம் அடிக்கடி காணப்பட்டால் மனநல
ஆலோசனை அவசியம். இதில் இரண்டு வகைகள் உண்டு. உதாரணமாக முதல் வகையில் பிறந்தது முதல் 10 அல்லது மேற்பட்ட வயது வரை கூட தொடர்ச்சியாக சிறுநீர் கழிப்பது பிரச்சினையாக இருக்கலாம். இப்பிரச்சினைக்கு நரம்பு அல்லது சிறுநீரக மண்டலங்களின் வளர்ச்சி குறைபாடு காரணமாக இருக்கலாம். இரண்டாம் வகையில் ஒரு குழந்தை 4 வயதிற்குள் தூக்கத்தில் முழுக்கட்டுப்பாட்டை
அடைந்த பின் சில வருடங்கள் கழித்து திரும்ப அந்த கட்டுப்பாட்டை இழந்து தூக்கத்தில் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும். இதற்கு கீழ்காணும் மனரீதியான பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். - பெற்றோர்களின் குறைவான கவனிப்பு
- குடும்ப பிரச்சினைகள் (உதாரணமாக தந்தை குடித்துவிட்டு தாயை அடிப்பது)
- அளவுக்கு மீறிய செல்லம் அல்லது கண்டிப்பு
- புதிதாக பிறந்த குழந்தையை அதிகமாக கவனிப்பதன் மூலம் தான் புறக்கணிக்கப்படுவதாக நினைத்தல்
- மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடப்படுதல்
- பெற்றோரின் பிரிவு
- பள்ளியில் ஏற்படும் பிரச்சினைகள்
- மனவளர்ச்சி குறைபாடு
- அதிகப்படியான துறுதுறுப்பு மற்றும் அதீத கவனக்குறைவு உள்ள குழந்தைகள்
- கற்றல் திறன் குறைபாடு
- பாலியல் அல்லது உடல் ரீதியாக துன்பப்படுத்தப்படுதல்.
- மேலும் சில குழந்தைகளுக்கு இது சிறுநீரில் கிருமி தொற்று ஏற்பட்டதன் அறிகுறியாக கூட இருக்கலாம்.
ஆரம்ப கட்டத்திலேயே இதை கவனமாக கையாண்டு மனநல ஆலோசனைகள் மற்றும் சரியான மருந்து வகைகளை உட்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
No comments:
Post a Comment