Tuesday, 19 July 2016

இண்டர்நெட்-விழிப்புணர்வு அவசியம்



251 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் விற்பனை என்று அறிவிப்பு வந்த இரண்டு நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு செய்ததால், அந்த நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டதாம். இது நம் மக்களின் மோகம் போகும் வேகத்திற்கான ஒரு சான்று தான். எல்லாம் டிஜிட்டல் மயமாவது பல சவுகரியங்களை தந்தாலும் அதில் உள்ள பிரச்சனைகளை வழக்கம் போல நம் அதிகார வர்க்கங்கள் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநல பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநல பாதிப்புகள் ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பத்து வருடங்கள் முன்னோடியாக சீனாவும், தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியை பின்பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது

இணையதள அடிமைத்தனம்-வெளிவர வழி உண்டா?(Solutions for internet addiction)


இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றிற்கு அடிமையாகும் வளர் இளம்பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒருவேளை அடிமையாகி விட்டால் என்ன செய்வது? இதனால் படிப்பு மற்றும் மனநிலை பாதித்துவிட்டதே? என்று பல பெற்றோர்கள் புலம்புவதை அடிக்கடி பார்த்துவருகின்றோம். இணையதள அடிமைத்தனத்திற்கென்றே மனநல சிகிச்சைகள், ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை அதை மீண்டும் உபயோகிப்பதை தடுப்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால்

இண்டர்நெட்-பெற்றோர் கண்காணிப்பது எப்படி? (Parental supervision of internet use)


ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்தி பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் அவர்களை கண்காணிக்க உதவும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலை வரை வலைதளத்தை உபயோகிப்பது, கணிணி, லேப்டாப் உபயோகிக்கும் போது அதிகம் தனிமையை நாடுவது, குறுக்கிடும்போது எரிச்சல்படுவது, மொபைல்போனின் பயன்பாடுகளுக்கு பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்பநபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, அவர்கள் தேடிய வலைதள வரலாறுகளை முற்றிலும் அழித்துவிடுவது உட்பட பல மாற்றங்கள் காணப்படும்
மென்பொருளும் உதவும்
‘முள்ளை முள்ளால் எடுப்பது’ போல வளர் இளம்பருவத்தினரின் வலைதள உபயோகத்தை கண்காணிக்க

சைபர் புல்லிங் ( Cyber Bullying )



புல்லிங் (Bullying) என்ற ஆங்கில வார்த்தைக்கு பலவீனமானவனை கொடுமைக்கு உள்ளாக்குதல் என்ற அர்த்தம் உண்டு. ஒருவரை  நேரடியாக மிரட்டுவது, பயமுறுத்துவது, உடல்ரீதியாக துன்புறுத்துவது போன்றவைகள் மட்டும் தான் புல்லிங் என கருதப்பட்டது. இந்த வகையான நடவடிக்கைகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான்.  ஆனால் சமீபகாலங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மற்றவர்களை மிரட்டுவதற்கு எளிதில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகிவிட்டது. தனக்கு

சைபர் செக்ஸ் (Cyber sex)


வளர் இளம்பருவத்தில் ஏற்படும் பாலியல் மீதான நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இரகசியமாக செய்ய முடிவது, வெளியில் சொல்லமுடியாத கற்பனைகளை நேரில் சொல்வதை விட சாட் ரூம் என்ற பகுதியில் எதிர்பாலருடன் பகிர்ந்து கொள்வது எந்தவித பதற்றத்தையும் ஏற்படுத்தாது. எங்கும் எப்போது வேண்டுமானாலும் கிடைப்பது பொன்றவைகளே வளர் இளம்பருவத்தினர் வலைதளங்களில் சைபர் செக்ஸில் ஈடுபட காரணங்கள் ஆகும். ஏனென்றால் வலைதள யுகத்திற்கு முன்பு ஓரமாக உள்ள பெட்டிக்கடைகளிலோ, ஆர்வக்கோளாறு உள்ள அண்ணன்மார்களிடமோ மட்டுமே கிடைக்கக்கூடிய மஞ்சள் புத்தகங்கள் இப்போது வீட்டு அறைக்குள்ளாகவே கிடைத்து விடுகிறது.

குறுந்தகவல்கள் மூலமாக பாலியல் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுதல், வெப் கேமராக்கள்

ஆன்லைன் ஆபத்துகள் (adverse effects of internet)


ஆன்லைன் ஆபத்து
குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரை இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் கேம்ஸ் போன்றவை வெளிவிளையாட்டுகளை விட அதிகம் ஈர்க்கின்றது. தங்களால் ஆதிக்கம் செலுத்த முடிவது, தனிமை மற்றும் மனசோர்வுகளின் போது அதை தணியச்செய்வது போன்ற காரணங்களால் அதில் அடிமையாகும் அளவுக்கு மாறிவிடுகின்றனர். மேலும் கொல்வது, சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுக்கள் நிஜவாழ்க்கையிலும்

புதைக்கப்படும் உணர்ச்சிகளும்,அறிவும் (Internet kills your emotions and knowledge)

புதைக்கப்படும் உணர்ச்சிகள்
சமீபத்தில் நடிகர் விஜய சேதுபதி “பேஸ்புக் என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட் செய்து அதிலிருந்து விலகிவிட்டேன்” என பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது தான் தற்போதைய ஆராய்ச்சிகளின் முடிவுகளும் கூட. ஒருவேளை நடிகர் விஜய சேதுபதி, சமூகவலைதளங்களின் பாதிப்புகளை குறித்து விளம்பர தூதுவராக நடிப்பது கூட ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஸ்மைலிகள் பயன்படுத்தும் பலரின் முகத்தில் உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறாது. சமூகம் உருவாவதே தனிமனிதனிடம் இருந்து தான். ஒருவருக்கொருவர் முகம் பார்த்து

Tuesday, 28 June 2016

போதைக்கு பெண்கள் விதிவிலக்கா? (Female Alcoholism)


பள்ளிமாணவிகள் தேர்வு முடிந்ததை கொண்டாடும் விதமாக ஒன்றுசேர்ந்து மதுஅருந்துவது போன்ற படங்கள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வளர்இளம் பெண்கள் போதைப்பொருட்களை உபயோகிப்பது கணிசமாக அதிகரித்திருந்தாலும், ஆண்களிடமிருந்து அவர்களை வித்தியாசப்படுத்துவது ஒரே விஷயம் தான். வளர்இளம் பெண்கள் போதைப்பொருட்களை கூட்டமாக, கொண்டாட்டங்களின் போது மட்டும் தான் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இன்னும் சில சமூகரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆண்களைப் போல தனிமையில் போதை சுகத்திற்காக மட்டும் உபயோகப்படுத்தும் பழக்கம் அதிக அளவில் இன்னும் வரவில்லை. ஆனால் அதைநோக்கி முன்னேறி சென்றுகொண்டிருப்பது அதிர்ச்சியான செய்தி தான்..


           வளர்இளம் பெண்களின் போதைப்பழக்கத்திற்கும் இளவயது கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களுக்கும் நேரடிதொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பெண்கள் 100 மில்லி லிட்டர் குடிப்பது ஆண்கள் 300 மில்லி லிட்டர் குடிப்பதற்கு சமம். அத்தனை எளிதில் ஆண்களை விட எளிதில் போதைக்கு அடிமையாகும் அளவிற்கு அவர்களின் நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. மேலும் ஆண்களை ஒப்பிடும்போது மது அருந்தும் பெண்கள் வெகு சீக்கிரத்திலேயே கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கர்ப்ப காலத்தில் மது அருந்துவது வளரும் சிசுவின் வளர்ச்சியை பாதிப்பது மட்டுமல்லாமல், மனவளர்ச்சி குறைபாடோடு பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளை மட்டும் கண்காணித்தால் போதும், பெண்பிள்ளைகளை பாதுகாத்தால் மட்டும் போதும் என்று இருந்துவிடுவது நல்லதல்ல. 

Monday, 27 June 2016

ஆபத்தான நட்பும், தனிமையும் (Alcohol and peer pressure)


நட்பு வட்டம்

பெரும்பாலான இளம்பருவத்தினருக்கு போதைப்பழக்கங்களின் அறிமுகம் நண்பர்கள் மூலம் தான் கிடைக்கிறது. அவர்களின் உற்சாக தூண்டுதல்கள், போதைப்பொருள்களைப் பற்றிய தவறான வழிகாட்டுதல் போன்றவை ஒருமுறை முயற்சிசெய்து பார்த்தால் தான் என்ன, என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாட ஆரம்பிக்கும் இந்த பழக்கம், நாளடைவில் எல்லா சூழ்நிலைகளிலும் எடுக்கும் அளவுக்கு கொண்டுபோய்விடும். பின்பு குடிப்பதற்கென்றே அவர்களாகவே சூழ்நிலைகளை ஏற்படுத்தி, அதை குடிப்பதற்கு சாக்குபோக்காக மாற்றிக்கொள்ளும் மனநிலை எற்படும்.  மனதிற்கு உற்சாகம் இல்லாத நேரங்கள் மற்றும் தோல்விகளால் துவண்டு இருக்கும் நேரங்களில் “சரக்கு அடிச்சா உன் கவலையெல்லாம் பறந்து போய்விடும்” என்று நண்பர்கள் தூண்டுவது பலருக்கு போதைப்பழக்கத்தின் முதல்படியாக அமைந்துவிடும். எனவே இதுபோன்ற

போதைப்பழக்கம்-குடும்பவியாதியா? (Alcohol addiction-Role of family)


      ‘இளமையில் கல்’ என்பதை ‘இளமையில் கள்’ என நம் இளைஞர்கள் புரிந்துகொண்டார்கள் போலும். இளைஞர்கள் குடிக்க ஆரம்பிக்கும் சராசரிவயது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது மிகவும் ஆபத்தான விஷயமும் கூட. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் முதல் ஆரம்பித்து கஞ்சா, ஹெராயின் உட்பட பலவகையான போதைப் பழக்கவழக்கங்கள் வளர் இளம்பருவத்தினரிடையே நிலவிவருகிறது. இந்த போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தால் மட்டும் ஏற்படுவது அல்ல. நாம் சாப்பிடும் மிக்சர் போல குடும்பச்சூழல், சமுதாயம், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி, தனிப்பட்ட குணநலங்கள் மற்றும் மரபணு மாற்றங்கள் ஆகியவை சேர்ந்த கலவைதான் ஒருவரின் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் தன்மையை தீர்மானிக்கிறது.
குடும்பச்சூழல்
 ஒரு குழந்தை வளரும்போது நல்ல குடும்பச்சூழல் தான் ஆரோக்கியமான மனநல வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. வளர்இளம் பருவத்தில் தான் ஒருவரின் குணநலங்கள் முதிர்ச்சி அடைய

Saturday, 11 June 2016

யார் உங்கள் ஆசிரியன்? (Teacher-student-Internet)


இணையதளம் மற்றும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதள பயன்பாட்டுக்கு பின்பு ஆசிரியர் மாணவர் உறவுகளில் பெரிய இடைவெளி ஏற்பட்டு வருவதாக சமீபத்தில் நான் பேசுவதற்காக சென்ற ஆசிரியர்கள் கூட்டத்தின் முடிவில் பல கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இண்டர்நெட்டில் தேடி பதில் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துக்களை கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரங்களில் சமூகவலைதளங்களை தைரியமாக பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையை நிர்பந்தித்தது தான்.
அறிவா? தகவலா?

‘எல்லாம் தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதை கவனிக்கவேண்டும்’ என்ற எண்ணம் பரவலாக மாணவர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. சமூகவலைதளங்களின் மூலமாக தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் எல்லா நேரங்களிலும் அவை அறிவுசார்ந்த ( Knowledge )  விஷயங்களாக இருக்க முடியாது. மாறாக அவை தகவல் சார்ந்த ( Information ) விஷயங்களாக மட்டும் இருப்பின் பல சமூக சிக்கல்களை ஏற்படுத்தும். உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற சர்க்கரை வியாதிக்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது சர்க்கரை வியாதிக்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்து கொண்டால் அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத்துறையில் உடல்பருமனைக் குறைக்கவும், சில கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பலருக்கு தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம். இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, டாக்டர் குழந்தையின்மைக்கு சுகர் மாத்திரையை தவறாக கொடுத்து விட்டார் என்ற செய்தியை பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது மருத்துவத்துறையை மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தை தேடிப்பார்த்து தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டு பார்ப்பதே மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும்

இண்டர்நெட்-எளிதில் அடிமையாவது யார்? (Risk factors for internet addiction)


தனிமையில் இனிமை
காற்று புகமுடியாத இடங்களில் கூட நுழைந்துவிடும் இணையதளம், அலைக்கற்றைகள் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுவதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்வரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளை பெற்றோர் நேரடியாக கண்காணிக்க முடிந்த்து. “இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற’ என்று பெற்றோரோ, ‘ உங்க பையன் பஸ் ஸ்டாண்டு கிட்ட ஒரு பொண்ணுகிட்ட  ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததை பாத்தேனே’ என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இண்டர்நெட் உலகத்தில் நடப்பதை கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் வலைதளம், மொபைல் போனை உபயோகிப்பதற்கு நேரம் காலம் கிடையாது.
எளிதில் அடிமையாவது யார்?
இணையதளத்தை உபயோகப்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ அது போல சில குறிப்பிட்ட பிரச்சனையுள்ள வளர் இளம்பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
Ø  மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
Ø  இயற்கையாகவே அதிக பதற்ற தன்மை உள்ளவர்கள்
Ø  கூச்ச சுபாவம் உள்ளவர்கள்
Ø  படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்
Ø  கற்றல்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்
Ø  சமூக பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே  கிடைக்கும் குழந்தைகள்
Ø  அதிக துறுதுறுப்பு மற்றும் கவனக்குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள் (ADHD)
Ø  மிதமான அளவு ,ஆட்டிசம் (Autism) என்ற பாதிப்புக்குள்ளானவர்கள்
Ø  தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள்
Ø  அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்
Ø  சிறுவயதிலேயே சமூகவிரோத செயல்கள் மற்றும் வேறு போதைப்பழக்கங்களுக்கு ஆளாகும் வளர் இளம்பருவத்தினர்
என்ன காரணம்?
வளர் இளம்பருவத்தில் “நீ படிப்பதற்காக மட்டும் தான் நேர்ந்து விடப்பட்டிருக்கிறாய்” என்ற அளவிற்கு பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படும்போது அதை ஆரோக்கியமாக கையாள தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியினால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்பு கம்பளம் விரித்த கனவு உலகம் போல காட்சியளிப்பதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு
  • வளர் இளம் பருவத்தினருக்கு தங்கள் மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது
  •  அதிக எதிர்பார்ப்பை திணிக்கும் உலகத்திலிருந்தும், தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது
  • முகம் பார்த்து பேச தேவையில்லாத இணையதள உலகம், அவர்களின் கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாக குறுந்தகவல்கள் மூலமாக எல்லா கருத்துக்களையும் பரிமாறும் மேடையாகின்றது
  • உண்மை உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர் இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் பெறலாம்

Friday, 3 June 2016

வலைவிரிக்கும் வலைதளம் (Signs of Internet addiction)


“என் பையனுக்கு மொபைல் போன்ல உள்ள எல்லா அப்ளிக்கேசனும் அத்துப்படி”, “மூணு வயசுலேயே எல்லா கேம்ஸையும் இன்டர்நெட்டை ஆன் பண்ணி அவனாகவே டவுன்லோட் செஞ்சிருவான்”, “பேஸ்புக்குல இப்பவே அவனுக்கு 200 ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா?” என்று மெய்சிலிர்த்துக்கொள்ளும் பெற்றோர்கள் பலர் சில வருடங்கள் கழித்து பள்ளி ஆசிரியரிடமோ அல்லது மருத்துவரிடமோ “24 மணிநேரமும் நெட்லயே இருக்கான், ஸ்கூலுக்கு போகமாட்டேனு அடம்பிடிக்கிறான், ஸ்மார்ட்போன் வாங்கி குடுத்து மாசாமாசம் டேட்டா ரீசார்ஜ் பண்ணலனா காலேஜ் போகமாட்டேனு சொல்லி வீட்டுல உள்ள பொருள்களை எல்லாம் உடைக்கிறான்” என்ற புகாருடன் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்டர்நெட் போதை
இன்டர்நெட் அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது ‘என்ன பாஸ் நீங்க, எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க, மனநல பாதிப்புனு சொல்றீங்க, அதனால எத்தனை நல்ல விசயங்கள் இருக்கு, நாங்க என்னதான் பண்றது’ என்று கேட்டார்.

இண்டர்நெட் தொற்றுநோய் (Infectious Internet addiction)


நாம் பயன்படுத்தும் பென்சில் மிகவும் பயனுள்ள ஒரு பொருளாக இருந்தாலும், அவைகளை உருவாக்க ஒரு மரம் பலியாகி உள்ளது என்பதை மறுக்க இயலாது. அது போலத்தான் தகவல் தொழில்நுட்பத்தில் வரும் புதிய கண்டுபிடிப்புகளினால் பல நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இல்லாமல் இல்லை.
மீம்ஸ் கலாச்சாரம் ( Memes )
ஒரு படத்தை அல்லது ஒருவரின் கருத்தை, நகைச்சுவை உணர்வை கலந்து வலைதளங்களில் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தான் மீம்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தப்பட்ட இது இன்று பிறரை கேலிசெய்யவும், மனதைப் புண்படுத்தவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது ஒரு ஆரோக்கியமற்ற சமூக சூழலை உருவாக்கிவருகிறது. ஒரு தனிநபரையோ, அரசியல் தலைவரையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ இன்று இதன் மூலம் உலகம் அறிய தாக்குவது மிகவும் எளிது. மேலும் இதன் மூலம் ஒரு தரமான,நல்ல கருத்தை நீர்த்துபோகவும் செய்யலாம் .அல்லது விவாதத்திற்கே தகுதியில்லாத ஒரு விஷயத்தை மிக முக்கியமான கருத்தாக எல்லோர் கண்களுக்கும் பூதாகரப்படுத்தி காண்பிக்கும் மாயக்கண்ணாடியாக கூட இதை பயன்படுத்தலாம்.
பாதிப்பின் தீவிரம்
வள்ளுவர் சொன்ன ‘நாவினால் சுட்ட வடு’ கூட சிலகாலங்களில் ஆறிப்போகலாம். ஆனால் இது போன்ற சமூகவலைதள தாக்குதல்களின் சிறப்பம்சம்

Friday, 27 May 2016

ஹிஸ்டீரியாவின் அறிகுறிகளும், தீர்வும் (Symptoms of Hysteria)


ஹிஸ்டீரியாவில் வர வாய்ப்புள்ள நோய்கள் 
  • வலிப்பு நோய் 
  • திடீரென ஏற்படும் மயக்கம்  
  • உணர்ச்சியற்ற கோமா போன்ற நிலை 
  • பக்கவாதம் 
  • கை,கால் நடுக்கம் 
  • பேசமுடியாமை 
  • நடக்க இயலாமல் தடுமாற்றம் 
  • உடல் மரத்துபோதல் 
  • மூச்சடைப்பு

இதன் முக்கியத்துவம் என்ன?
இதில் பிரச்சனையே இந்த மனநோயானது நரம்பியல் நோய் அறிகுறிகளாக வெளிப்படுவது தான். இதனால் பாதிக்கப்படும் வளர் இளம் பருவத்தினரை நரம்பியல் நோய்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்தான். ஆனால் தேவையான எல்லா பரிசோதனைகளிலும் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்ற பட்சத்தில் கண்டிப்பாக மனநல ஆலோசனை அவசியம். இல்லையென்றால் ‘பழி ஓர் இடம் பாவம் ஓர் இடம்’ என்பது போல வீணான பரிசோதனைகளுக்கு இவர்கள் உட்படுத்தப்படுவதுடன் தேவையற்ற மாத்திரை  மருந்துகளையும் உட்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்படும். இதனால் காலம் வீணாவதுடன் நோய் தீவிரமாகவும் மாறும்.

வலிப்பில்லாத வலிப்பு
சமீபத்தில் 17 வயது பெண் ஒருவரை அவரது அம்மா திடீர்மயக்கம் மற்றும் வலிப்புநோய் இருப்பதாகவும், பல வருடங்கள் மாத்திரைகள் எடுத்தபோதும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறி அழைத்து வந்திருந்தனர். அந்த பெண்ணின் வலிப்பு நோய் அறிகுறி மற்றும் வரலாற்றை தெளிவாக கேட்டுப்பார்த்த போது, 4 வருடங்களுக்கு முன்பு அவரது அப்பா இறந்த பிறகு அந்த பெண்ணை ஹாஸ்டலில் சேர்த்து விட்டதாகவும் அதற்கு பின்தான் இந்த நோயே ஆரம்பித்ததாகவும் சொன்னார்கள். அந்த பெண்ணின் வலிப்பு அறிகுறியின் தன்மையும், நரம்பு பாதிப்பினால் ஏற்படும் வலிப்பின் தன்மையோடு ஒத்துபோகவில்லை. மாறாக அப்பாவை இழந்ததால் மனதில் ஏற்பட்ட பாதிப்பினால் தான் இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டது தெரியவந்தது. இதில் வேதனை என்னவென்றால் மாத்திரை கொடுத்தும் சரியாகாததால், அவள் வேண்டுமென்றே செய்வதாகவும், பேய்க்கோளாறு பிடித்திருப்பதாகவும் கூறி சூடு போட்டு சிகிச்சை(?) செய்திருக்கிறார்கள். இது ஒரு உதாரணம் தான். உண்மையில் இது போல பலர் தகுந்த சிகிச்சை இருப்பது தெரியாமல் பல வருடங்கள் கழித்தே சரியான காரணத்தை கண்டறியும் நிலையில் இருக்கின்றனர். புள்ளிவிபரங்களின்படி சுமார் 30% வரையிலான வலிப்புநோய்கள் இந்தவகையை சேர்ந்தவைதான் என்று நிருபித்திருக்கிறார்கள். ஆனால் 25% க்கும் மேலானோர் வலிப்பு மாத்திரைகளையே உட்கொள்ளும் நிலை உள்ளது. 

எப்படி கண்டுபிடிப்பது?
இந்த நோயின் எல்லா அறிகுறிகளும் உடல் ரீதியாக இருப்பதால் பெற்றோர்களுக்கு இது மன நல பாதிப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் இருக்க வாய்ப்பில்லை தான். ஆனால் சில வித்தியாசங்களை வைத்து இதன் தன்மையை புரிந்து கொள்ளலாம். 
  • இந்த அறிகுறிகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக சில நாட்களுக்குள் மனதை காயப்படுத்திய சம்பவங்கள் ஏதேனும் பெரும்பாலும் இருக்கும்
  • அந்த உடல் நோய் அறிகுறிகளுக்குள்ள எல்லா பரிசோதனைகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் எதுவும் இருக்காது
  • சில வேளைகளில் அதிக கவனம் செலுத்தும்போது நோய் அறிகுறிகள் கூடும். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக அர்த்தமல்ல
  • இந்த நோய் அறிகுறிகள் மூலம் அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆதாயம் இருக்கும். உதாரணமாக ஒருமுறை இதுபோன்ற வலிப்பு வந்தவுடன் சில நாட்கள் பள்ளிசெல்வதிலிருந்து விதிவிலக்கு கிடைத்திருக்கும். பின்பு பள்ளி செல்ல விருப்பம் இல்லாத நாட்களில் இந்த தொந்தரவு திரும்ப ஏற்படும்.
  • அறிவியல் ரீதியான அறிகுறிகளாக இல்லாமல் அவர்களுக்கு தெரிந்த விதத்திலேயே அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக உண்மையான வலிப்பு ஏற்படும்போது இருபுறமும் உள்ள கை,கால்கள் ஒரே நேரத்தில் வெட்டி இழுக்கும். ஆனால் இந்த ஹிஸ்டீரியாவில் ஏற்படும் வலிப்பில் கை கால்கள் வெவ்வேறு நேரத்தில் இழுத்து, சைக்கிள் ஓட்டுவது போல கூட இருக்கும்
  • இடைப்பட்ட நாட்களில் அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாதது போல சாதாரணமாகவும் இருப்பார்கள்
  • முக்கியமாக அந்தந்த நோய் அறிகுறிகளுக்குரிய மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. வலிப்பு அல்லது மூர்ச்சைக்குரிய மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தீவிர பாதிப்புகள் ஏற்படும்.

என்ன சிகிச்சை?
ஹிஸ்டீரியாவில் ஏற்படும் உடல்நோய் அறிகுறிகள் மனநல சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் மூலமாக குணப்படுத்தக்கூடியதே. மனதை பாதித்த சம்பவங்களை வெளிக்கொண்டுவந்து நோயைக் குணப்படுத்த ஹிப்னோசிஸ்(Hypnosis), நார்கோ பரிசோதனைகள் (Narcoanalysis) உட்பட பல உளவியல் சிகிச்சைகள் உள்ளன. ஒருவேளை மன அழுத்தநோயின் அறிகுறியாக இருக்குமானால் மாத்திரைகளுடன் மின் அதிர்வு சிகிச்சையும் தேவைப்படலாம். இவர்களை திட்டுவதாலோ, வேண்டுமென்றே செய்கிறார்கள் என்று கூறுவதாலோ பிரச்சனை கூடுமே தவிர குறையாது. அதே நேரம் இந்த அறிகுறிகளின் காரணமாக அதிகப்படியான சலுகைகளும் கொடுக்ககூடாது. அப்பா அம்மா இருவரின் கவனிப்பு மற்றும் அன்பு சமநிலையாக பகிர்ந்தளிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். 

ஹிஸ்டீரியா என்றால் என்ன? (Hysteria)



வளர் இளம்பருவத்தில் “வரும் ஆனா வராது” என்பது போல “இருக்கும் ஆனா இருக்காது” என்று வெளிப்படும் ஒருவகை மனநல பிரச்சினை உண்டு. இதை வாசிக்கும்போதே உங்களுக்கு கொஞ்சம் புதிராக இருப்பது போல இந்த நோயும் ஒரு புதிர் நிறைந்தது தான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவர்களை திணறச்செய்த ஒரு நோய்க்கு “ஹிஸ்டீரியா” (Hysteria) என்று பெயர். இதில் நரம்பு பிரச்சனைக்கான அறிகுறிகள் இருக்கும், ஆனால் நரம்புகளில் எந்தவித சேதமோ, மாற்றமோ இருக்காது. மனரீதியான பிரச்சனைகள் தான் அதற்கு காரணமாக இருந்ததை கண்டுபிடித்து “ஹிப்னோசிஸ்” (Hypnosis) என்ற முறையில் அதற்கு தீர்வுகாணும் முயற்சியில் வெற்றியும் கண்டார் பாரீசில் பிறந்த பிரபல நரம்பியல் நிபுணர் ஜீன் மார்டின் சார்கோட். அவரிடம் சிலகாலம் பயிற்சி மேற்கொண்ட சிக்மண்ட் ஃப்ராய்டு இதை மேலும் ஆழமாக ஆய்வு செய்து உளபகுப்பாய்வு சிகிச்சை (Psychoanalysis) முறையை நடைமுறைக்கு கொண்டுவந்ததால் உளபகுப்பாய்வின் தந்தை என்ற பெயரை பெற்றார். .
ஹிஸ்டீரியா எப்படி உருவாகிறது?
இந்த சிக்மண்ட் ஃப்ராய்டு தான் உடலின் பாகங்கள் போல மனதிற்கும் கட்டமைப்பு உண்டு என்று வெளியிட்டார். அவரின் கூற்றுபடி எல்லா மனிதருக்கும் ஆழ்மனது, சுய உணர்வுடன் கூடிய வெளிமனது என இரண்டு உண்டு. நாம் பிறந்தது முதல் இன்றுவரை நடந்த எல்லா அனுபவங்களும் முழுமையாகவோ அல்லது சிறுபகுதியாகவோ ஆழ்மனதில் கணிணியின் ஹார்டு டிஸ்க்கில் பதிவது போல பதிந்து கொண்டேவரும். ஆனால் எது பதிகின்றது என்பது வெளிமனதுக்கு தெரிவதில்லை. பதிந்த விசயங்கள்

Thursday, 26 May 2016

மன அழுத்த நோயைக்குறித்த ‘தவறான நம்பிக்கைகள்’:


  
  • இவர்கள் சோம்பேறிகள், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்
  •   தாழ்வு மனப்பான்மை அதிகம் உள்ளவர்கள்  மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் தங்கள் மனதை உற்சாகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்
  • படிப்பில் ஆர்வம் இல்லாததால் வேண்டுமென்றே செய்கிறார்கள்
  •  பொறுப்புகளை தட்டிக்கழிப்பதற்கான ஒரு வழியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்
  • அவர்களின் குணம் சரியில்லை, மன அழுத்தத்திலிருந்து அவர்களாக முன்வந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும்
  • மன அழுத்தத்திற்கு மருத்துவம் இல்லை, அட்வைஸ் பண்ணுவதன் மூலமாகவோ, மதரீதியான செயல்கள் மூலமாகவோ குணப்படுத்திவிடலாம்
  •  மாத்திரைகள் சாப்பிட்டால் காலம் முழுக்க அதற்கு அடிமையாகிவிடுவார்கள்
  • மனநல மருத்துவரிடம் சென்றால் தூங்கவைப்பதற்கு தான் மாத்திரைகள் கொடுப்பார்கள் என்பதும் தவறான எண்ணமாகும். இதற்கான மாத்திரைகள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, செரடோனின் என்ற வேதியல் பொருளை சமநிலைப்படுத்தவே கொடுக்கப்படுகிறது

மன அழுத்தம் விளையாட்டு அல்ல..


வேண்டாம் விபரீத விளையாட்டு
நல்ல திடகாத்திரமான பயில்வானுக்கு வயிறுவலி வந்தால் ‘ அவனுக்கு தைரியம் இல்லை’ என்றோ ‘நீ நினைச்சா வயிற்றுவலியை நிறுத்திவிடலாம், முயற்சி செய்’ என்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் அது எதாவது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். அது போல் மனஅழுத்தமும் ஒரு நோய் தான். இது ஒரு நோய்நிலை என்பதை பலதரப்பினரும் ஏற்றுக்கொள்ள மறுப்பதும், காலம் தாமதிப்பதும் வளரிளம் பருவத்தினரை மேலும் பாதிப்பதுடன், தற்கொலை வரை சென்றுவிடுகிறது. சில நேரங்களில் தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றிய பின்னர் தான் இவர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டது தெரியவரும். அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாத ஒரு புறக்கணிக்கப்பட்ட பிரச்சனையாகத் தான் இன்னமும் உள்ளது. எனவே ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது. தேவைப்பட்டால் மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம் தாழ்வுமனப்பான்மையா?
பல நேரங்களில் மனஅழுத்தம் என்பது தாழ்வுமனப்பான்மைக்கு ஈடான ஒன்றாக தவறாக கருதப்படுவதும் சிகிச்சைக்கு செல்ல காலம் தாழ்த்துவதற்கு காரணமாகிறது.

மன அழுத்தநோய்: தடுப்பு மற்றும் சிகிச்சை


  • Ø  தினமும் மிதமான உடற்பயிற்சி, நண்பர்களுடன் திறந்தவெளி விளையாட்டுகளில் ஈடுபடுதல் நல்லது
  • Ø  குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், மன பாரங்களை பகிர்தல் அவசியம்
  • Ø  புத்தகங்கள் வாசிப்பது, இசைக்கருவிகளை வாசிக்க பயிற்சி எடுக்கலாம்
  • Ø  நேரத்தை பகிர்ந்து செலவிட கற்றுக்கொள்வது பலன் தரும் (Time management)
  • Ø  வேலைகளை பட்டியலிட்டு முக்கிய வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பது மற்றும் பெரிய வேலைகளை பகுதிபகுதியாக பிரித்து செயல்படலாம்
  • Ø  பிரச்சனைகள் எப்போதுமே நிரந்தரமானது அல்ல, பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளவேண்டும்.
  • Ø  பதற்றமான நேரங்களில் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து பிடித்து, சில நொடிகளுக்கு பிறகு மெதுவாக வெளிவிடலாம். அவ்வாறு செய்யும்போது கைகால், உடல் பாகங்களை இறுக்கமாக வைக்காமல் தளர்ச்சியாக விடவேண்டும்.
  • Ø  பெரும்பாலான நேரங்களில் ஆலோசனைகளுடன் மாத்திரைகளின் உதவி கட்டாயம் தேவைப்படும்.
  • Ø  தீவிரமான மனஅழுத்தம் மற்றும் அதிகமான தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களுக்கு மின் அதிர்வு சிகிச்சை (Electroconvulsive therapy) உடனடியாக பலனைத் தரும். இது பாதுகாப்பான முறை மட்டுமல்லாது மாத்திரைகளின் தேவையையும் குறைக்கும். 

மன அழுத்த நோயின் அறிகுறிகள் (signs of depression)


கீழே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் காணப்பட்டால் அது மன அழுத்த நோயாக இருக்கலாம்

  • Ø  வழக்கத்திற்கு மாறான மந்தத்தன்மை
  • Ø  சுறுசுறுப்பு இல்லாமல் அதிக சோர்வுடன் காணப்படுவது
  • Ø  முன்பு நாட்டமுள்ள விஷயங்களில் எந்த ஈடுபாடும் இல்லாமல் ஒதுங்கியிருப்பது
  • Ø  தூக்கமின்மை அல்லது எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருப்பது
  • Ø  பசியின்மை மற்றும் உடல் எடை குறைவு
  • Ø  காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது, முயற்சி செய்வது
  • Ø  தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்
  • Ø  தான் எதற்கும் உதவாதவன், வாழ தகுதியற்றவன் என்ற எண்ணம்
  • Ø  அதீத குற்ற உணர்ச்சி
  • Ø  எரிச்சல் தன்மை, கோபம்
  • Ø  படிப்பில் பின்தங்குதல், பள்ளியை புறக்கணித்தல்
  • Ø  காரணமில்லாமல் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது
  • Ø  புதிதாக ஏற்படும் போதைப்பழக்கம்
  •        அதிக கவனக்குறைவு, ஞாபக மறதி
   தற்கொலையின் தூதன்

   வளர் இளம்பருவத்தில் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக்கு அப்பா திட்டியது முதல் காதல் தோல்வி வரை

மன அழுத்தம் ஒரு நோயா? Depressive disorder


“உன்னால் முடியும் தம்பி, நாங்க எல்லாரும் இருக்கோம் உன்னை நம்பி” என்ற அறிவுரைகள் யாருக்கு கிடைக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வளரிளம் பருவத்தினருக்கு இலவசமாகவே கிடைக்கும். “உன்னை பெத்ததுக்கு ஒரு  தென்னைமரத்த நட்டு வச்சிருந்தா இளநீராவது கிடைக்கும். இப்படி தண்டமா உட்கார்ந்திருக்கியே” என பல நேரங்களில் வளரிளம் பருவத்தினருக்கு அர்ச்சனைகள் கிடைக்கும். அவர்களின் நடவடிக்கைகளும் சில நேரங்களில் அப்படித்தான் அமைந்துவிடும். ஆனால் மன அழுத்த நோயிலும் இது போன்ற மாற்றங்கள் வரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மன அழுத்தம் ஒரு நோயா?
நான் இன்னைக்கு டிப்ரஸ்டா இருக்கேன் என்று எல்லோரும் சாதாரணமாக கூறுவது வேறு, மன அழுத்தம் அல்லது டிப்ரசன் நோய் (Depressive disorder) என்பது வேறு. இது சுமார் 10-15% வரையிலான வளரிளம் பருவத்தினரை பாதிக்கும் அளவிற்கு பரவலான ஒன்று. இது ஏதாவது மோசமான வாழ்க்கை சூழலினாலும் ஏற்படலாம், எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் கூட தானாகவும் ஏற்படலாம். பெற்றோர்களிடமிருந்து கூட மன அழுத்த நோய் ஏற்படுத்தும் மரபணுக்கள்

இளம் சமூகவிரோதிகளை அடையாளம் காணுதல்


ஓட்டம் பிடித்தல்
ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ, சில வளர் இளம்பருவத்தினருக்கு வீட்டை விட்டு ஓடிப்போவது வாடிக்கையான விஷயமாக மாறிவிடும். அப்பா அடித்தாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது ஓடிப்போவது உண்டு. இது ‘நாங்கள் குணரீதியாக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்’ என பெற்றோருக்கு மறைமுகமாக சொல்லும் எச்சரிக்கையாகும். அதற்கு முன்னரே இவர்கள் அடிக்கடி இரவில் வெளியில் தங்குவது, நண்பர்களுடன் குறிப்பாக வயதில் மூத்தவர்களுடன் ஊர் சுற்றிவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவது வழக்கமாக இருக்கும். பள்ளிக்கு செல்லாமல் அடிக்கடி படத்துக்கு செல்வதும் ஒரு முக்கிய மாற்றம் தான்.
கும்பல் சேருதல்
உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையிலோ, ஒதுக்குப்புறமான இடங்களிலோ கூட்டம் கூடுவார்கள். இங்கு தான் இளம் சமூகரோதிகள் உருவாகும் இடம். பல புதிய நட்புகளுடன் போதைப்பொருட்களின் அறிமுகமும் இங்குதான் கிடைக்கும். ஒன்றாக சேர்ந்த்து புகைப்பது முதல் கஞ்சாவை உபயோகிப்பது வரை கற்றுக்கொள்வார்கள். இவர்களுக்குள் தன்பாலின உறவும் ஏற்பட

Thursday, 19 May 2016

இளம் சமூகவிரோத செயல்கள் எப்படி உருவாகின்றன?

சமீபகாலமாக பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் பெருகிவருவது வளர் இளம்பருவத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய சவால்தான். பள்ளி, கல்லூரிமாணவர்களிடையே அடிக்கடி கைகலப்புகள் முதல் கொலைச் சம்பவங்கள் அன்றாடம் அரங்கேறிவருகின்றது. சில நேரங்களில் ஆசிரியர்களையே தாக்கும் அளவுக்கு பிரச்சினை உருவாகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்கும்போது விபரீதங்கள் நடக்கிறது.
குற்ற உணர்ச்சியற்ற நிலை
எல்லா வளர் இளம்பருவத்தினரும் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் அவ்வப்போது சில முன்எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும். பெரும்பாலும் இவர்களின் குடும்பசூழல் திருப்திகரமாக இருக்காது. சிறிய பிரச்சினைகளுக்கு கூட வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவது, ஆயுதங்களை உபயோகிப்பது, பிறருக்கு கொலைமிரட்டல் விடுப்பது, பழிவாங்கும் செயல்கள், தன் கையை கிழித்துக்கொள்வது அல்லது அடிக்கடி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வித்தியாசங்கள் காணப்பட்டால் நிச்சயம் அவர்கள் கவனத்திற்குரியவர்கள்.